சென்னை, 16, பிப்ரவரி 2022: 'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய எம்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளியான திரைப்படம் 'கடைசி விவசாயி'.
முதன்மை கதாபாத்திரத்தில் நல்லாண்டி
இந்த திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் (நிஜ விவசாயி) நல்லாண்டி என்கிற முதியவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இந்த முதியவருடன் இணைந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் - ரிச்சர்டு ஹர்வி இசையமைத்துள்ளார்கள்.
பல தீவிர சினிமா விரும்பிகள் மிகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமானமானாலும், இந்த படம் பிப்ரவரி 11-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்திலான ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'கடைசி விவசாயி'..
விளைநிலங்களை வீட்டுமனையாக்கும் வியாபாரிகளை எதிர்த்தும் தன் சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் கிராமத்து கடைசி விவசாயி எப்படி, அதிகாரம் படைத்தவர்களால் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிற்கவைக்கப்படுகிறார்? சிறையில் இருந்து மீண்டாரா? அவர் விவசாயத்துக்காக தனி ஆளாக நடவு நட்ட நாற்றுகள் என்ன ஆனது? என்பதே கடைசி விவசாயி படத்தின் கதை.
Also Read: அஜித் நடிக்கும் வலிமை தியேட்டர்ல எத்தன மணிலேர்ந்து? நோட் பண்ணுங்க AK Fans! பரபர அப்டேட்
பொறுக்கி படம், மோசமான படம்லாம் பாத்துருப்போம்..
இந்நிலையில் இப்படம் குறித்து தம்முடைய ஆதங்கத்தை பேசியிருக்கும் இயக்குநர் மிஷ்கின், “நாம் எவ்வளவு பொறுக்கி படங்களை பாத்திருப்போம், எவ்வளவு மோசமான படங்களை நாம் கொண்டாடி தீர்த்திருக்கிறோம். இந்த படத்தையும், இந்த படத்தை எம்.மணிகண்டனை கொண்டாடவில்லை என்றால் நமக்குள் எந்த ஸ்பிருச்சுவல் (ஆன்மீக) தன்மையும் இல்லை என்று அர்த்தம். இதை ஒரு முஸ்லீம், கிருஸ்தவர், பௌத்தத்தை சேர்ந்தவர் என எல்லோராலயும் கொண்டாடப் படவேண்டும்.” என பேசியுள்ளார்.
அப்படியெல்லாம் ஒரு ம*ரும் கிடையாது
மேலும் பேசிய இயக்குநர் மிஷ்கின், “எல்லாரும் மிஷ்கின் விஷூவலாக பெரிய ஃபிலிம் மேக்கர் என்று என்னை சொல்கிறார்கள். அப்படியெல்லாம் ஒரு ம*ரும் கிடையாது.. என்னை விட ஒரு 50%, 100% நல்ல விஷூவலாக, வொர்த்தாக, யோசித்து இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் எம். மணிகண்டன். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.