2016-ல் இயக்குனர் பாலா தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் திரைப்பட விமர்சகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது.

Also Read | உறவினர் கல்யாணத்தில் நடிகை சாய்பல்லவி ஆடிய சூப்பர் குத்து டான்ஸ்.. இப்போ இதான் ட்ரெண்ட்!
பிசாசு முதலாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்குகின்றார். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுற்று பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். படத்தின் முதல் சிங்கிள் பாடலான "உறவின் பாட்டு" பாடல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 ஆம் நாள் வெளியானது. படத்தின் டீசரும் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை பூர்ணா, நமது பிகைண்ட்வுட்ஸ் சேனலுக்கு கொடுத்துள்ள பிரத்யேக பேட்டியில் சில தகவல்களுக்கு பதில் அளித்துள்ளார். அதில், நடிகை ஆண்ட்ரியா ஆடையில்லாமல் நடித்தது பற்றிய கேள்விக்கு, "இது குறித்த கேள்வியை ஆண்ட்ரியாவிடம் தான் கேட்க வேண்டும், எனக்கு அது பற்றி தெரியும் ஆனால் நான் இது குறித்து சொல்ல மாட்டேன். மிஷ்கின் அல்லது ஆண்ட்ரியா தான் இது குறித்து பதில் அளிக்க வேண்டும்". என பதில் அளித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8