"மைனஸ் 12 டிகிரி குளிரில் ஷூட்டிங்".. 'LEO' படம் குறித்து மிஷ்கின் வெளியிட்ட வைரல் அறிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லியோ படம் குறித்து நடிகர் மிஷ்கின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Mysskin about Vijay Lokesh Kanagaraj Leo Kashmir Shooting
Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Samantha : "என்னை பாதித்த விஷயங்கள்.." நடிகை சமந்தாவின் உருக்கமான பதிவு.!

நடிகர் விஜய் நடிப்பில்  'லியோ' படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. S .லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

ராக்ஸ்டார் அனிருத், லியோ படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் தமது சமூக வலைத்தளங்களில் லியோ படம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இன்று (26.02.2023) காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன்... minus 12 டிகிரியில் 500 பேர் கொண்ட Leo படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.

ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். Assistant director-களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.

என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். Leo திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும். அன்புடன் மிஷ்கின்" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Also Read | "அப்பா பற்றி நெகிழ்ச்சி கவிதை.." Bakasuran லயா உருக்கமான பேட்டி .. EXCLUSIVE..!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mysskin about Vijay Lokesh Kanagaraj Leo Kashmir Shooting

People looking for online information on Leo, Leo Kashmir Shooting, Lokesh Kanagaraj, Mysskin, Vijay will find this news story useful.