"நான் இறக்கும் போது இந்தம்மாவ நெனப்பேன்".. லட்சுமி ராமகிருஷ்ணன் குறித்து எமோஷனல் ஆன MYSSKIN!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி திரைப்படங்கள் இயக்கி வருபவர் இயக்குனர் மிஷ்கின்.

Advertising
>
Advertising

சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின், அஞ்சாதே, நந்தலாலா தொடங்கி ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல படங்களையும் இயக்கி உள்ளார்.

தற்போது பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி இருந்த நிலையில், இதன் ட்ரைலர் மற்றும் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் முதன்மை கதாபத்திரத்தில் ஆண்ட்ரியாவும், சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

இயக்கம் மட்டுமில்லாமல், சில படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்துள்ள இயக்குனர் மிஷ்கின், தனக்கென ஒரு ஸ்டைலில் திரைப்படங்கள் இயக்குவது மூலம் பலரின் பேவரைட் இயக்குனராகவும் வலம் வருகிறார்.

இந்த நிலையில், Behindwoods சேனல் சார்பில் நடத்தப்பட்ட 'Mysskin Fans Festival' நிகழ்ச்சியிலும் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டிருந்தார். இதில், பல சுவாரஸ்ய தகவல்களை ரசிகர்கள் முன்னிலையில் மிஷ்கின் தெரிவித்திருந்த நிலையில், இயக்குனர் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவரது கணவருடன் Mysskin Fans Festival நிகழ்ச்சியில் வருகை தந்திருந்தார்.

அந்த சமயத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் அவரது கணவர் ராம் குறித்து பேசும் இயக்குனர் மிஷ்கின், "ரொம்ப நேசித்த நபர்கள் இரண்டு பேரும். என் சினிமாவில் எனக்கு ஒரு தாய் மாதிரி, ஒரு சகோதரி மாதிரி எப்பொழுதுமே என் கூடவே இருந்துட்டு இருக்காங்க. இன்னிக்கு யாரு வர்றாங்கன்னு கேட்டேன், லட்சுமின்னு சொன்னதும் 'போதும் எனக்கு' அப்படின்னு சொன்னேன். நாங்க சினிமா பண்ணும் போது எங்க கூட ஒரு தாயும் மகனும், ஒரு அக்காவும் தம்பியும், அண்ணனும் தங்கச்சியும் போல ஒரு உறவு மாதிரி தான் நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்.

எனது வாழ்க்கை ஃபுல்லா, நான் இறக்கும் போது எனது மகளை நினைப்பேன். இந்த அம்மாவை (லட்சுமி ராமகிருஷ்ணன்) நினைப்பேன், ராமையும் நினைப்பேன். அவர் ஒரு அற்புதமான Human Being. ஒரு டீசண்டான நடிகை" என லட்சுமி ராமகிருஷ்ணனை குறிப்பிட்டு, அதற்கு 60 மார்க் போடும் மிஷ்கின், அற்புதமான இயக்குனர் என்றும் அவரை பாராட்டுகிறார்.

தொடர்ந்து பேசும் மிஷ்கின், லட்சுமி ராமகிருஷ்ணன் கணவர் ராம் குறித்து பேசும் பேசுகையில், "என் படத்துல நடிச்சிருக்காரு. நடிக்கவே தெரியாது ஆனா என் படத்துல சூப்பரா நடிச்சிருக்காரு. இப்போ யோசிச்சிட்டு இருக்காரு, அடுத்த படத்துல போடணும்னு சொல்லிட்டு. ஒரு சிறந்த மனம் கொண்ட மனிதர்கள். இவர்கள் இங்கு இருப்பது பெருமையாக உள்ளது" என பெருந்தன்மையுடன் மிஷ்கின் தெரிவித்தார்.

"நான் இறக்கும் போது இந்தம்மாவ நெனப்பேன்".. லட்சுமி ராமகிருஷ்ணன் குறித்து எமோஷனல் ஆன MYSSKIN! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mysskin about lakshmi ramakrishnan in fans festival

People looking for online information on Lakshmi Ramakrishnan, Mysskin, Mysskin Fans Festival will find this news story useful.