சென்னையில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சில திரைப்பட நடிகர்கள் தாமாகவே முன் வந்து வைரஸ் தொற்றுப் பரிசோதனை செய்துள்ளனர்.
சமீபத்தில் திரைப் பிரபலங்கள் சிலர் கொரோனாவில் பாதிப்படைந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாக சென்னையில் பரவி வரும் நிலையில், மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இயக்குனர் பாரதிராஜா, கமல்ஹாசன், உள்ளிட்டோர் தங்களைத் தாமே தனிமைப்படுத்தி பத்திரமாக உள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின், விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் சிலர் தாமாகவே முன்வந்து அவரவர் வீடுகளில் குவாரண்டைன் ஆகியுள்ளனர்.
இயக்குனர் மிஷ்கின் புத்தகங்கள் படிப்பதிலும், ஆன்லைனில் பியானோ கற்றுக் கொண்டதலும் நேரத்தை பயனுள்ள வகையில் கழித்து வருவதாக ஒரு பேட்டியில் கூறினார்.
ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் அவரவர் வீட்டில் பத்திரமாக பாதுகாப்பாக இருக்கும்படி திரைப்பிரபலங்கள் பலர் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.