மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு-2.. நான்கு மொழிகளில் டீசர்..! எப்போ ரிலீஸ்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிசாசு 2 படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | காஷ்மீர் இந்துக்களின் கதை.. பிரதமர் பாராட்டிய படம்.. பிரபல OTT-யில் தமிழில் ரிலீஸ்! எப்போ? எதுல?

2016-ல் இயக்குனர் பாலா தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் திரைப்பட விமர்சகர்கள்  மத்தியில்  நல்ல விமர்சனங்களை பெற்றது

பிசாசு முதலாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்குகின்றார். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுற்று பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். படத்தின் முதல் சிங்கிள் பாடலான "உறவின் பாட்டு" பாடல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 ஆம் நாள் வெளியானது.

இந்நிலையில் படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 29 ஆம் நாள் மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் டீசர் தென்னக மொழிகளான தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என 4 மொழிகளிலும் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு-2.. நான்கு மொழிகளில் டீசர்..! எப்போ ரிலீஸ்? வீடியோ

Myskin Andrea Jeremiah Pisasu 2 Movie Teaser Update

People looking for online information on Andrea Jeremiah, Myskin, Pisasu 2 Movie, Pisasu 2 Movie Teaser, Pisasu 2 Movie Updates will find this news story useful.