வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்த மைனா நந்தினி - பிரபலங்கள் வாழ்த்து !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரில் மைனா என்ற வேடத்தில் நடித்திருந்தவர் நந்தினி. இந்த நிகழ்ச்சியில் அவரது வேடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் மைனா நந்தினி என்றே அழைக்கப்படுகிறார்.

சமீபத்தில் இவர் சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவருக்கும் 'நாயகி' சீரியலில் நடித்து வரும் யோகேஷ்வரனுக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. தற்போது மைனா நந்தினி கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், ''வளைகாப்பு, குட்டி யோகி அல்லது குட்டி மைனா நந்தினிக்கு காத்திருக்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Myna Nandhini Shares her baby shower pic goes Viral ft Yogeshwaran | வைரலாகும் நடிகை மைனா நந்தினியின் வளைகாப்பு புகைப்படங்கள்

People looking for online information on Myna Nandhini will find this news story useful.