"ADK மாமாவும் டைட்டில் வின் பண்ண வாய்ப்பு இருக்கு".. கணிச்சு சொன்ன மைனா!!.. BIGG BOSS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Advertising
>
Advertising

Also Read | "மிக்க நன்றி நண்பா, இதனால தான் நீங்க தளபதி".. தமிழில் தெறிக்கும் ஷாருக்கானின் ட்வீட்!!

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். தொடர்ந்து, ஆறாவது பிக் பாஸ் சீசனின் கடைசி நாமினேஷனும் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது.

இதில் "Nominated" என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒன்று இருக்க, அதனை தாங்கள் நாமினேட் செய்யும் போட்டியாளர் முகத்தில் ஒட்டி அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட சிலரும் பிக் பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர்.

முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் Guest வருகிறார்கள் என போட்டியாளர்கள் குதூகலாமாகி இருந்த நிலையில், அவர்கள் வந்து பலரின் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் என அனைத்து விஷயங்களையும் கூறியதால், ஏன் அவர்கள் வருகை தந்தார்கள் என்பது போல போட்டியாளர்கள் கதி கலங்கியும் போயிருந்தனர்.

இதற்கு மத்தியில், பிக் பாஸ் Finale நெருங்கி வருவதால் எந்த போட்டியாளர்கள் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார்கள் என்பது பற்றியும் தற்போதில் இருந்தே நிறைய பேர் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், டைட்டில் ஜெயிக்க வாய்ப்புள்ள போட்டியாளர் குறித்து மைனா நந்தினி பேசியுள்ள விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அமுதவாணன், மைனா நந்தினி உள்ளிட்டோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் மைனா நந்தினி, "ஏடிகே மாமாவும் டைட்டில் வின் பண்ண வாய்ப்பு இருக்கு" என தனது கணிப்பை குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "அண்ணா, எல்லா எமோஷனல் சீன்ஸ் பார்த்தப்போ".. வாரிசு படம் பற்றி மனம் உருகிய தமன்... Viral Tweet!!

தொடர்புடைய இணைப்புகள்

Myna Nandhini Prediction about ADK winning bigg boss title

People looking for online information on ADK, Amudhavanan, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Myna Nandhini, Vijay Television, Vijay tv will find this news story useful.