தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Also Read | "கண்ணிலே ஆகாசம்".. கண்ணீர் விட்டு கலங்கிய தமன்.. எமோஷனல் ஆன வாரிசு படக்குழு!!
மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கடுத்து, BB Critics விருதுகள் வழங்கப்பட்டது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.
இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
இந்த நிலையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் நடைபெற்றது. இப்படி பரபரப்பான சம்பவங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வீட்டுக்குள் பிராங்க் செய்திருக்கிறார் மைனா. இதனால் வீடே கலகலப்பாகியிருக்கிறது.
கார்டன் பகுதியில் அனைவரும் அமர்ந்திருக்க, வீட்டுக்குள் விக்ரம் மற்றும் மைனா பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, தனக்கு போர் அடிப்பதாக கூறுகிறார் மைனா. அப்போது பிக்பாஸிடம்,"வீட்டுக்கு வந்துட்டிங்களா நைனா, எல்லோரையும் டாஸ்க்கிற்கு கூப்பிடுங்க" என்கிறார் மைனா. அருகில் இருக்கும் விக்ரமன் "இப்போ டாஸ்க்கிற்கு கூப்டுவாறு" என்கிறார். "கூப்பிட்டா திட்டுவாங்களே" என மைனா சொல்ல, "திட்டுனா வாங்கிக்கோ" என்கிறார் விக்ரமன்.
இதனிடையே, "எல்லோரையும் உள்ள வர வைப்போமா?" என மைனா கேட்க, "டாஸ்க் இருக்குனு கூப்பிடுங்க" என்கிறார் விக்ரமன். அப்போது "எல்லோரும் வாங்க என சத்தமாக" அழைக்கிறார் மைனா. கார்டன் பகுதியில் இருந்த அனைவரும் அதனை கேட்டு எழுந்து நிற்கின்றனர். "என்ன ஆச்சு" என தங்களுக்குள் பேசியபடியே வீட்டுக்குள் வருகின்றனர் அனைவரும். அப்போது மைனா,"வெல்கம் டு பிக்பாஸ் ஷோ" என்கிறார்.
"எதுக்கு கத்துன" என அசீம் கேட்க, "விக்ரமன் கிட்ட எப்படி பேசுறதுனு சொல்லி காட்டிட்டு இருந்தேன்" என சிரித்தபடி சொல்கிறார் மைனா. "வேணும்னே கத்தி சொல்லிட்டு நடிக்கிறியா" அமுதவாணன் கேட்க, அனைவரும் சிரிக்கின்றனர்.
Also Read | ஷிவினை பற்றிய ஹேஷ்டாக்ஸ்.. சொல்லியதும் வெட்கப்பட்ட விக்ரமன்.. !