ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
Also Read | சந்தனக்கூடு விழாவுக்கு ஆட்டோவில் வந்த A.R. ரஹ்மான்.. நாகூர் தர்ஹாவில் வழிபாடு.. வீடியோ
அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.
இதற்கு மத்தியில் நாமினேஷன் டாஸ்க்கிற்கு புதிய முறையையும் கையாண்டுள்ளது பிக் பாஸ். பொதுவாக ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்ற போட்டியாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு நாமினேஷன் செய்வார்கள். ஆனால் இந்த முறை ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் இத்தனை நாட்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாடி மக்களை எப்படி எல்லாம் சுவாரஸ்யப்படுத்தினார்கள் என்பது குறித்து பேச அதன் அடிப்படையில், ஒரு நபர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் பிக் பாஸ் தெரிவிக்கிறார். சில விதிமுறைகளுடன் தங்களைப் பற்றி போட்டியாளர்கள் பேச வேண்டும் என பிக் பாஸ் குறிப்பிட, அனைத்து போட்டியாளர்களும் அதற்கேற்ப பேசுகின்றனர். இதன் இறுதியில், சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிய அசிம், நாமினேஷன் ப்ரீ Zone-இல் வெற்றி பெற்றதாக பிக் பாஸ் அறிவித்தார்.
மறுபக்கம், இந்த வார கேப்டனாக ADKவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல, Ticket to Finale டாஸ்க்குகளும் தற்போது பிக் பாஸ் வீட்டில் ஆரம்பமாகி உள்ளது. இதற்கு மத்தியில், நாமினேஷன் டாஸ்க்கில் முதல் ஆளாக மைனா நந்தினி சென்றதாக தெரிகிறது. அப்போது, அவர் இத்தனை நாட்கள் ஆடியது குறித்து பிக் பாஸ் பேச சொல்லி கேட்க, அதற்கு தான் எப்படி எல்லாம் மக்களை பொழுது போக்க வைத்தேன் என்பது பற்றியும் மைனா நந்தினி புள்ளிகளை அடுக்குகிறார்.
இறுதியில், அவர் கிளம்பும் போது வெளியே மற்ற போட்டியாளரிடம் உள்ளே என்ன நடந்தது என்பது பற்றி தெரிவிக்க கூடாது என்றும் மைனாவிடம் பிக் பாஸ் அறிவுறுத்துகிறார். இதற்கடுத்து, மைனா நந்தினி வெளியே வந்ததும் என்ன நடந்தது என்பது பற்றி ஷிவின், விக்ரமன் உள்ளிட்டோர் கேட்கின்றனர். ஆனால், நடந்ததை தெரிவிக்காத மைனா நந்தினி, "ஆத்திசூடி 60 செகண்ட்ஸ்ல சொல்ல சொன்னாங்க. எனக்கு தெரியல" என்கிறார்.
இதனை விக்ரமன் நம்பாத நிலையில், அமுதவாணன் உண்மை தான் என்றும் தெரிவிக்கிறார். அது மட்டுமில்லாமல், விக்ரமன் உதவியுடன் ஆத்திசூடி கற்கவும் செய்கிறார் அமுதவாணன். டாஸ்க் பற்றி மைனா பொய் சொன்ன நிலையில், நம்மிடமும் கேட்டு விடுவாரோ என அமுதவாணன் ஆத்திசூடி கற்று தயாரான விஷயம் அதிக வைரலாகி இருந்தது.
மைனா போன பிறகு, அமுதவாணன் தன்னை பற்ற நாமினேஷன் சுற்றில் பேசிக் கொண்டு வந்த பிறகு தான் உண்மை என்ன என்பது தெரிகிறது. அப்போது மைனா நந்தினியிடம் பேசும் அமுதவாணன், "எனக்கு 5 ஆவது வாய்ப்பாடு கேட்டாங்கமா" என ஜாலியாக தெரிவிக்கவும் செய்கிறார்.