”டாக்டர் கண்ணுல OPERATION பண்ண சொல்லிட்டாங்க”… பதறிய குடும்பம்.. என்ன ஆச்சு மைனா நந்தினிக்கு..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மைனா நந்தினி தன்னுடைய நண்பரோடு சேர்ந்து அப்பா அம்மாவிடம் செய்த prank வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | KRK: என் "தங்கம்".. நயன்தாரா, VJS, சமந்தா கேரக்டர் பற்றி விக்னேஷ் சிவன் வைரல் Post

சரவணன் மீனாட்சி ‘மைனா’…

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சியில் கலகலப்பான மைனா என்ற கிராமத்துப் பெண் வேடத்தில் நடித்து பிரபலமானவர் நந்தினி. அந்த சீரியலுக்குப் பிறகு அவரை மைனா நந்தினி என்றே பலரும் அழைத்து வருகின்றனர். சீரியல் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் அவர் சினிமாவிலும் கால்பதித்தார்.

திரைப்படங்கள்….

வெண்ணிலா கபடி குழு, வம்சம், கேடிபில்லா கிள்ளாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானார். அதே நேரத்தில் பிரியமானவளே, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார். சூப்பர் சிங்கர் உள்ளிட்ட விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

திருமணம்..

நந்தினி யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அந்த தமப்திகளுக்கு ஆண்குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தைக்கு துருவன் என்று பெயர் வைத்துள்ளனர். அவ்வப்போது குழந்தை மற்றும் கணவரோடு இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

அப்பா அம்மாவிடம் prank..

இந்நிலையில் சமீபத்தில் மைனா நந்தினி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்ட ஒரு prank வீடியோ இணையத்தில் கவனத்தைப் பெற்றது. சமீபத்தில் நந்தினி தன்னுடைய கண்ணில் ஏதோ தொற்றுப் பிரச்சனை ஏற்பட அதற்காக மருத்துவரிடம் சென்றுள்ளார். மருத்துவர் அது சாதாரன infection தான் சொல்லியுள்ளார். ஆனால் அதை மறைத்த நந்தினி தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களிடம் “கண்ணில் டாக்டர் ஆபரேஷன் செய்ய சொல்லிவிட்டார்” என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதைக் கேட்ட நந்தினியின் அம்மா ஷாக் ஆக, நந்தினி நண்பர் உடனே மருத்துவருக்கு போன் பண்ணி விசாரிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் நந்தினி உண்மையை சொல்ல, அனைவரும் ரிலாக்ஸ் ஆகின்றனர்.

பின்னர் நந்தினியின் அம்மாவும், நண்பரும் சேர்ந்து நந்தினியின் அப்பாவை வரவழைத்து அவரிடமும் இதையே சொல்லி prank செய்கின்றனர். அவரும் அதிர்ச்சியாகி நந்தினியிடம் “ஆப்பரேஷன் பண்ணிக்கோ… இல்லன்னா இன்னொரு கண்ணுக்கும் இன்பெக்ஷன் பரவிடும்” என அதட்டுகிறார். பின்னர் அவரிடம் அனைவரும் சேர்ந்து உண்மைய சொல்கின்றனர். நந்தினியின் இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

”டாக்டர் கண்ணுல OPERATION பண்ண சொல்லிட்டாங்க”… பதறிய குடும்பம்.. என்ன ஆச்சு மைனா நந்தினிக்கு..? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Myna nandhini latest prank to her parents went viral

People looking for online information on மைனா நந்தினி, Myna Nandhini, Myna nandhini latest prank, Vijay Television will find this news story useful.