"இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!!".. டிவி சீரியல் தம்பதியின் தெறிக்க விடும் ஃபோட்டோஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி மூலம் பிரபலமான தம்பதியர்கள் மைனா நந்தினியும் யோகியும். 

இருவருமே மக்களின் அபிமான டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். அத்துடன் அவ்வப்போது தங்களது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் சேர்ந்து இப்போது எடுத்துக்கொண்டுள்ள ஃபோட்டோஷூட் வைரலாகி வருகிறது. 

இந்த புகைப்படங்களில் மைனா நந்தினியும் யோகியும் கலக்கலான பாரம்பரிய உடையணிந்து ஒரு போஸ், வயதான மாடர்ன் தம்பதிகளாக ஒரு போஸ், முக்கியமாக பிளாக் தீமில் அல்டிமேட்டான மேக்-அப்புடன் கூடிய ஒரு போஸ், இஸ்லாமிய தம்பதியராக ஒரு போஸ் என விதவிதமான மேக்-அப்களுடன் போஸ் கொடுத்துள்ளனர். 

இந்த ட்ரெண்டிங் ஃபோட்டோஷூட்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன. இந்த தம்பதியருக்கு துருவன் எனும் ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Myna nandhini and yogi new photoshoot trending

People looking for online information on Myna Nandhini, Photoshoot, Tamil TV show, Trending, Tv Serial, VijayTelevision, Yogi will find this news story useful.