வசமா போட்டுக் கொடுத்த மைனா.. அடுத்த நிமிஷமே அசிம் சொன்ன வார்த்தை!!.. செம FUN-ப்பா 😅

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertising
>
Advertising

Also Read | "மைனா சொன்னத நம்பி".. விக்ரமன்கிட்ட ஆத்திசூடி கத்துகிட்ட அமுது.. Lastல பிக்பாஸ் வெச்ச ட்விஸ்ட்!!

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

இதற்கு மத்தியில் நாமினேஷன் டாஸ்க்கிற்கு புதிய முறையையும் கையாண்டுள்ளது பிக் பாஸ். பொதுவாக ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்ற போட்டியாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு நாமினேஷன் செய்வார்கள். ஆனால் இந்த முறை தங்கள் ஆடியது குறித்த சுவாரஸ்ய கருத்துக்களை பேச வைத்து அதில் ஒருவரை நாமினேஷன் ப்ரீ Zone என குறிப்பிட்டிருந்தது. இதில், அசிம் வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது ஆரம்பமாகி உள்ளதாக தெரிகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார இறுதியில், அதிக Tiles கொண்டு தடம் பதிக்கும் நபர், நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில், அசிம் தூங்கும் போது நடந்த சம்பவம் ஒன்று, தற்போது பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

பொதுவாக பிக் பாஸ் வீட்டிற்குள் மதியம் யாரும் தூங்க கூடாது. அப்படி ஒருவேளை தூங்க முற்பட்டால் நாய் குலைக்கும் சத்தம் கேட்டு அவர்களை எழுப்பி விடும் என்பது பிக் பாஸ் விதியாக உள்ளது. இந்த சூழலில் கட்டிலில் படுத்திருக்கும் அசிம், லைட்டாக கண்ணை மூடி தூங்கி குறட்டை விடவும் செய்கிறார். இதை கவனித்த மைனா நந்தினி, தான் கண்ணை மூடியதற்கு நாய் சத்தம் கேட்டதாகவும் ஆனால் அசிம் குறட்டை விட்டு தூங்கிய பிறகும் சத்தம் கேட்கவில்லை என்றும் பிக் பாஸிடம் முறையிட, அடுத்த சில நொடிகளில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டு கண் திறக்கவும் செய்கிறார் அசிம்.

தொடர்ந்து பேசும் அசிம், "மைனா அங்க பாரு" என மைனா நந்தினி தூங்கியதால் தான் நாய் சத்தம் கேட்டதாக குறிப்பிடுகிறார். இவை அனைத்தையும் கவனித்த கதிரவன், நீ தூங்கியதால் தான் நாய் சத்தம் கேட்டது என்றும் சொன்னதே மைனா தான் என்றும் ஜாலியாக சிரித்துக் கொண்டே சொல்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, கேப்டனாக இருக்கும் ADK விடம் உங்கள் ஆட்சியில் போட்டியாளர்கள் தூங்குவதாகவும் ஜாலியாக முறையிடுகிறார் அமுதவாணன்.

Also Read | Varisu : தணிக்கையில் கிடைத்த ரிசல்ட் என்ன..?!.. வாரிசு படத்தின் சென்சார் அப்டேட்!!..

தொடர்புடைய இணைப்புகள்

Myna Nandhini about azeem sleeping in bigg boss house

People looking for online information on Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil, Myna Nandhini, Vikraman will find this news story useful.