"வனிதா வந்தா நேரா அசிம்கிட்ட போய்".. ஜாலியா மைனா நந்தினி சொன்ன விஷயம் 😅.. ஹவுஸ்மேட்ஸ் கலகல

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Advertising
>
Advertising

Also Read | பிரபல திரை அரங்கில் 3 Screens.. படம் திரையிடுவது பற்றி விஜய், அஜித் ரசிகர்கள் சேர்ந்து எடுத்த முடிவு!!.. வைரல்

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது. சமீபத்தில் வார இறுதியில் தோன்றி இருந்த கமல் ஹாசன், அந்த வாரத்தில் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்து நிறைய கருத்துக்களை தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஒரு சில டாஸ்க்குகளும் இதற்கு மத்தியில் அரங்கேறி இருந்தது. இதனிடையே, ரச்சிதாவும் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இதற்கு அடுத்தபடியாக, மீதமுள்ள போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். சமீபத்தில் நாமினேஷன் நடந்து முடிந்திருந்த நிலையில், இந்த வாரத்தில் வெளியே இருந்து சில பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்ரவர்த்தியும் யூ டியூபர் அகமது மீரானும் உள்ளே வருகை தந்திருந்தனர். அவர்கள் போட்டியாளர்கள் விளையாட்டு திறன் பற்றியும், உள்ளே நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இரவு நேரத்தில் அனைத்து போட்டியாளர்களும் அடுத்து உள்ளே யார் வருவார்கள் என்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிகிறது. அப்போது, பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்த வனிதா உள்ளே வருவார் என போட்டியாளர்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக ஆவேசமாகவும் செயல்பட்ட வனிதா குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயங்களை பேசி கொண்டிருக்க, நடுவே பேசும் மைனா நந்தினி, "வனிதா வந்தாங்கன்னா நேரா அசிம்ட்ட போயிட்டு நான் உங்க Fan அசிம்ன்னு சொல்ல போறாங்க" என ஜாலியாக குறிப்பிடுகிறார்.

Also Read | கேப்டன்சி TASK.. சூடுபிடிச்ச போட்டி.. கடைசி வரை Tough கொடுத்த அசீம்.. இந்த வார தலைவர் இவர்தான்.!

தொடர்புடைய இணைப்புகள்

Myna Nandhini about azeem and vanitha in bigg boss house

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Myna Nandhini, Vanitha, Vijay Television, Vijay tv will find this news story useful.