ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Also Read | "அவரோட Friend-ஆ பழகு".. மணிகண்டாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த அட்வைஸ்..!
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.
மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ADKவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர்.
இந்நிலையில், கார்டன் பகுதியில் மைனா, கதிரவன், அசீம், மணிகண்டா ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, பிக்பாஸ் பற்றி பிரபலங்களும் பேசிவருவதாக மணிகண்டா சொல்கிறார். அருகில் இருந்த மைனா,"ரம்யா கிருஷ்ணன் மேம் இந்த ஷோவை பார்க்குறாங்களாமே" என கேட்க, "ஆமா, அவங்க ஹோஸ்ட் பண்ணிருக்காங்க, இந்த ப்ரோக்ராம் அவங்களுக்கு பிடிக்குமாம்" என்கிறார் கதிர்.
தொடர்ந்து பேசிய மைனா,"தனலட்சுமி வெளியே போனதுக்கு ரம்யா கிருஷ்ணன் மேம் ஃபீல் பண்ணாங்களாம்" என்கிறார். இதற்கு பதில் அளித்த கதிர்,"தனா எல்லாம் வேற லெவல் ரீச்" எனச் சொல்ல, அருகில் அமர்ந்திருந்த மணிகண்டா "அது எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சியா இருந்திருக்கும்" என்கிறார். அப்போது பேசும் அசீம்,"ஏன் அப்படி இருந்திருக்கும்னா இவங்கல்லாம் போகமாட்டாங்கப்பா-ன்னு எல்லோரும் நினைக்கும்போது அவங்க எலிமினேட் ஆனது தான் பெரிய அதிர்ச்சியா இருந்திருக்கும்" என்கிறார்.
Also Read | சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்த ADK வின் பெற்றோர்.. நெகிழ்ந்துபோன பிக்பாஸ் வீடு..!