புதிதாக வெடித்த அசீம் - மைனா சண்டை.. தனியே உட்கார்ந்து அழுத மைனா.. BIGG BOSS 6 TAMIL

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இதில் டிஆர்பி டாஸ்க் போய்க்கொண்டிருக்கிறது. இந்த டாஸ்கில் ஜட்ஜ்மெண்ட் வழங்கிய மகேஸ்வரி மீது அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்தனர். அப்போது மகேஸ்வரி பிரேக்கிங் செய்தி வாசிப்பதற்கு அசீம் வராததால் அவர் இப்படி விமர்சனங்களை முன் வைப்பதாக கூறினார். இது இன்னும் பிக் பாஸ் வீட்டில் பெரிய பிரச்சினையானது. இது குறித்து பேசிய மைனா, “அசீம்.. உங்கள் அணியில் ஒரு விஷயம் என்றால் நீங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்” என்று கூறியதுடன், ஒரே அணிக்குள் இருக்கும் விஷயத்தை விமர்சிக்க கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

அதை அசீம் மறுத்தார். அப்போது இதே விஷயத்தை தனலட்சுமி முன்பொருமுறை கூறும்பொழுது அப்போது, அசீம் இப்போது சொன்ன இதே கருத்தை தனலட்சுமியிடம் கூறியதாக மகேஸ்வரியும்  மைனாவும் வாதிட்டனர். இது தொடர்பாக மைனா மற்றும் அசீம் இருவருக்கும் இடையே பேச்சு எழுந்து இறுதியில் வாக்குவாதமாக சென்றது. இதன்பிறகு தனியே உட்கார்ந்து அழுத மைனா, குயின்ஸி மற்றும் கதிரவனிடம் தான் ஒரு பெண் என்பதால் தன்னை அசீம் எடுத்தெறிந்து பேசுவதாக கூறினார்.

மேலும் பேசிய மைனா, “இந்த ஸ்கிரிப்டுக்காக அழைத்தபோது கடைசி நேரத்தில் அசீம், நான் எழுதவில்லை, நான் வரவில்லை, நீங்கள் யாரையாவது வைத்து பண்ணிக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டு விட்டார் என்று சொல்லி அழுகிறார். அவரை கதிரவன் மற்றும் குயின்ஸி இருவரும் தேற்றுகின்றனர். முன்னதாக இந்த டாஸ்கிற்காக மைனா, தமது அணியினை தயார் செய்யும்போது, தனலட்சுமி மற்றும் அசீம் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதை அடுத்து இருவரும் ஒரே அணியில் இருக்க முடியாது என்று இருவருமே கூறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Myna cried after argument with azeem bigg boss 6 tamil

People looking for online information on Azeem myna fight, Bigg boss 6 tamil promobigg boss 6 tamil contestants listbigg boss tamil, Bigg boss tamil 6bigg boss season 6vijay tvbigg boss tamil promo, Bigg boss tamil 6bigg boss tamil season 6bigg boss tamil 6 contestantsrachitha mahalakshmi, Myna azeem fight, Vikraman myna fight will find this news story useful.