விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 10 போட்டியாளர்கள் கிராண்ட் ஃபினாலே என்கிற ரேஸில் ஈடுபட்டிருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய கதைகளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருக்கின்றனர்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு பின் வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளராக வந்தவர் நடிகர் மற்றும் சின்னத்திரை நடிகர், தொகுப்பாளர் மற்றும் நடிகர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ். சஞ்சீவ் தமது ஸ்டோரியை பிக்பாஸ் வீட்டுக்குள் தற்போது கூறியிருந்தார். அதில், தன் குடும்பம், படிப்பு, வேலை உள்ளிட்டவற்றுள் தான் சந்தித்த வாழ்க்கை அனுபவங்களை சந்தித்த சஞ்சிவ், தன் அக்கா மற்றும் நடிகை சிந்துவின் மரணம் குறித்து உருக்கமாக பகிர்ந்திருந்தார்.
சென்னையை சேர்ந்த சஞ்சீவ், நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் உறவினர் ஆவர். லயோலா கல்லூரியில் நடிகர் விஜய்யுடன் படித்தபோது விஜய்க்கு நண்பரான சஞ்சீவ், விஜய் நடித்த நிலாவே வா திரைப்படத்தில் விஜய்யின் நண்பராக நடித்ததை தெரிவித்தார். மேலும் பேசியவர், தன் அக்காவும் பிரபல நடிகையுமான சிந்துவுக்கு திருமணம் ஆகி, விவாகரத்து நடந்தது, பின்னர் வீசிங் பிரச்சினை அதிகமாகி, மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது என அனைத்தையும் பிக்பாஸ் வீட்டுக்குள் கதை சொல்லும்போது உருக்கமாக பகிர்ந்தார்.
பின்னர், தன் அக்காவை எரிக்கும் போது அவருடைய மகளை கரை சேர்த்துவிடுவதாக சொன்ன சஞ்சீவ், தன் அக்கா குழந்தை பற்றியும் அவரை தாய் போல் தன் மனைவி பார்த்துக்கொண்டதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறினார்.
அப்போது பேசிய அவர், “அக்கா மகள் ஸ்ரேயா காலேஜ் போகும்போது, எனக்கு திருமணம் நடந்தது. ப்ரீத்தியும் நடிகைதான். நானும் நடிகர் தான். ஆனால் இருவரும் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்தது கிடையாது. இரண்டு முறை பார்த்தோம் ஒருசில டெலிபோன் உரையாடலில் ஆரம்பித்து காதல், கல்யாணம் வரை சென்றது. மூன்று மாதம் தான் காதலித்தோம். அடுத்த மாதத்தில் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். மகள் பிறந்தாள். பின்னர் 2011 இல் இருந்து வாழ்க்கை மாறிவிட்டது.
பின்னர் அக்கா மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். எங்களிடம் அந்த திருமணத்திற்கென்று.... ஆம், கொஞ்சம் இருந்தது. சேர்த்து வைத்திருந்தோம். எங்க அக்கா பொண்ணுக்கு இன்னொரு அம்மாவாக என் மனைவி இருந்தார். எங்களுக்கும் அப்போது இரண்டு குழந்தைகள்.. குழந்தைகளுக்காக சேர்த்து வைத்த பணம் எல்லாம் சேர்த்து அக்கா மகள் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று என் மனைவி கொடுத்தார்.
அக்கா மகளின் கல்யாணத்தை முடிக்க வேண்டியது என் கடமை என்றும் கூறினார். எல்லா மனைவிமார்களும் அதைச் செய்வார்களா என்று தெரியாது. எனக்கு ப்ரீத்தி செய்தார். என் அக்கா இருந்திருந்தால் கூட இந்த அளவுக்கு அவள் மகளுக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பாரா என்பது தெரியாது!” என்று சஞ்சீவ் கூறினார்.