அடடே.. நடிகை குஷ்பு.. ‘விக்ரம்’ கமலுடன் இருக்கும் ஃபோட்டோ..! கேப்சன் தான் அல்டிமேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஜூன் 3 முதல், உலகம் முழுவதும் கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.

Advertising
>
Advertising

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது.

படத்தில் கமலுடன்,  நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்திலும், நடிகர் காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர். விக்ரம் திரைப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், வசூல் ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அமெரிக்காவில் 3 நாட்களில் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை,  (இந்திய மதிப்பில் அமெரிக்காவில் 12 கோடி ரூபாய்) வசூலாக ஈட்டியுள்ளது. இந்நிலையில் கமலை கட்டிக்கொண்டபடி நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அத்துடன் அவர் பதிவிட்டுள்ள கேப்ஷனும் வைரலாகி வருகிறது.

அதன்படி நடிகை குஷ்பு, “மை ஹீரோ. மை ஃப்ரண்ட்.. மை விக்ரம்” என்று பதிவிட்டுள்ளார். நடிகை குஷ்பு கமலுடன் ஜோடியாக மைக்கேல் மதன காமராஜன், சிங்காரவேலன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

My Hero My Friend My Vikram Khushbu with kamal viral pic

People looking for online information on Kamal Haasan, Khusbboo Sundar, Khusbu, Vikram will find this news story useful.