சென்னை, 22, பிப்ரவரி 2022: பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் கொடுத்து, சில நேரங்களில் சில மனிதர்கள் என்கிற புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த தேவதை மற்றும் சாத்தான் பெயரை குறிப்பிட வேண்டும்.

தேவைதைகள், சாத்தான்கள்..
முன்னதாக இது தொடர்பாக பேசிய பாடலாசிரியர் சினேகன் தம்முடைய தயார்தான் தம்முடைய தேவதை என்றும், தம்முடைய பூஜை அறையில் கூட சாமி படத்துக்கு பதிலாக தாயாரின் புகைப்படம் இருக்கும் என்றும் எமோஷனலாக கூறுகிறார்.
இதேபோல் ஜூலி கூறும்பொழுது, ‘அடுத்தவர்களின் சாப்பாட்டில் மண்ணை அள்ளி போடுபவர்கள் அனைவருமே சாத்தான்கள் தான்.. நான் யார் பிழைப்பையும் இதுவரைக்கும் கெடுத்தது இல்லை, எனவே நானே என்னை தேவதை!” என்று கூறிக் கொள்கிறேன் என்று சொல்லியுள்ளார். இதில் தான் சுருதி, தமது தந்தை பற்றி குறிப்பிட்டுள்ள விஷயம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
சுருதியின் கதை
முன்னதாக, பிக்பாஸ் 5வது சீசனில் தமது கதையை சொல்லி இருந்த ஸ்ருதி, “என் அப்பாவின் முதல் மனைவி இறந்து விட, அம்மா, என் அப்பாவுக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்தார். என் அப்பாவுக்கும், என் அம்மாவைப் பெற்ற தாத்தாவுக்கும் ஒரே வயது. தாத்தா குடும்பம் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்தபோது அப்பா உதவி செய்ய, என் அம்மாவை என் அப்பாவிற்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அப்பாவிற்கு ஏற்கனவே 5 பிள்ளைகள். அதில் 4 பேர் அம்மாவை விட வயதில் மூத்தவர்கள்.
ஆம், அம்மாவிற்கு திருமணம் ஆகும் போது அவருக்கு 18 வயது தான். பிறகு நான் பிறந்தேன். அப்பாவிற்கு பெண் பிள்ளைகளை பிடிக்கும் என்றாலும் ஏற்கனவே 5 பிள்ளைகள் இருந்ததால், என்னை ஒரு வேண்டாத பிள்ளையாகவே கருதினார். நான்அப்பாவை அப்பா என்று ஒரு முறை கூட அழைத்தது இல்லை. தந்தை இறந்த பிறகு வாழ்க்கை கஷ்டமான நிலை. படித்து வேலைக்கு சென்று அம்மாவை காப்பாற்ற நினைத்தபோது அம்மாவுக்கு விபத்து நடந்தது. பொருளாதார ரீதியாக, குடும்பத்தை காப்பாற்ற சிர்ரமப்பட்டேன். கல்லூரி படிப்பை முடித்து, ஒரு கம்பெனியில் 2 வருடம் பணிபுரிந்த பின்பு, மாடலிங்கில் இறங்கினேன்!” மிக உருக்கமாக பேசினார்.
என் அப்பா சாத்தான்..
இந்நிலையில் தான் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் நடந்த இந்த டாஸ்கில் சுருதி பேசும்போது, “என்னுடைய சாத்தான் என் அப்பா தான், என்னுடைய வாழ்க்கை அவரால் தான் இவ்வளவு கடினமாக மாற்றியது” என்று கண்கலங்கியபடி பேசுகிறார். இதை பார்த்த அவர்கள் அனைவருமே கண்கலங்கி விட்டனர். இந்த புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
எந்த ஒரு மகளுக்கும் தமது தந்தையை இப்படி சொல்லும் ஒரு நிலை வரக்கூடாது என இதை பார்க்கும் ரசிகர்கள் பலரும் சுருதிக்கு ஆறுதல்களையும் நம்பிக்கை வார்த்தைகளையும் கூறி வருகின்றனர்.