திகில் கலந்து STYLISH-ஆக உருவாகியுள்ள ''மை டியர் லிசா''.. மிரட்டலாக வெளியான ட்ரெய்லர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் வசந்த் நடித்துள்ள மை டியர் லிசா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

சென்னை-28 படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய் வசந்த். இதை தொடர்ந்து இவர் நாடோடிகள், அச்சமின்றி, வேலைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் மை டியர் லிசா. 

இத்திரைப்படத்தில் இவருடன் சாந்தினி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ராஜன் கிருஷ்ணன் இயக்கத்தில், Triple V Records நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் மை டியர் லிசா திரைப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது. பக்கா திகில் படமாக உருவான மை டியர் லிசாவின் மிரட்டலான ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விரைவில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் அறிவிப்புகள் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

மை டியர் லிசா பட ட்ரெய்லர் | my dear lisa starring vijay vasanth chandhini trailer

People looking for online information on Chandhini Tamilarasan, My Dear Lisa, Vijay vasanth will find this news story useful.