மை டியர் பூதம் மூசாவா இது?... தாடி, மீசை எல்லாம் வளர்ந்து ஹீரோ மாறி ஆகிட்டாரே.. நீங்களே பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90ஸ் கிட்ஸ் களின் பேவரைட் தொடர்களில் முக்கியமான ஒன்று மை டியர் பூதம். சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பள்ளி முடிந்தவுடன் எப்படியாவது சீக்கிரம் வீட்டிற்கு சென்று மை டியர் பூதம் பார்த்துவிடவேண்டும் என்பதுதான் அப்போதைய சிறுவர்களின் நோக்கமாக இருந்தது. அந்த அளவிற்கு இந்த சீரியல் 900 எபிசோடுகளை தாண்டி சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த சீரியலில் நடித்த பல இளம் சிறுவர்கள் தற்போது சினிமாவில் நடிகர்களாக இருக்கின்றனர். ஏன் இதில் நடித்த நிவேதா தாமஸ் கூட தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கிறார். ரஜினி, கமல், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

ந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிறுவனின் பெயர் அபிலாஷ். இவர் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் மைடியர் பூதம் சீரியலில் நடிக்கும் முன்னர் பல தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார். மை டியர் பூதம் சீரியலுக்கு பிறகு விக்ரமாதித்யன், கோகுலத்தில் சீதை, கொடிமுல்லை போன்ற சீரியல்களிலும் நடித்தார். வளர்ந்து இளைஞனாக மாறி விட்ட அபிலாஷ், அதன்பிறகு நாகேஷ் திரையரங்கம், தோனி கபடி குழு போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் மை டியர் பூதம் அபிலாஷ் தற்போது எப்படி இருக்கிறார் என்று பார்க்கப் பலருக்கும் ஆவல் இருக்கும். அவர் அளித்த லேட்டஸ்ட் பேட்டி இதோ..!

மை டியர் பூதம் மூசாவா இது?... தாடி, மீசை எல்லாம் வளர்ந்து ஹீரோ மாறி ஆகிட்டாரே.. நீங்களே பாருங்க! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

My dear bootham child artist moosa மை டியர் பூதம் மூசாவா இது?

People looking for online information on My dear bootham will find this news story useful.