சென்னை, 15, பிப்ரவரி 2022: இல்லத்தரசிகளின் ஃபேவரைட்டாக தொலைக்காட்சி சீரியல்கள் திகழ்ந்து வருகின்றன.
முத்தழகு சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியலின் ஆரம்ப ப்ரோமோவில் கிராபிக்ஸ் காளை மாட்டை வைத்து நாயகி விவசாயம் செய்ததாக கூறப்பட்ட காட்சிகள் ட்ரெண்ட் ஆகின. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முத்தழகு சீரியலின் புதிய ப்ரோமோ சோஷியல் மீடியாவில் இன்னும் வைரலாகி வருகிறது.
ட்ரெண்ட் ஆன ப்ரோமோ
இந்த ட்ரெண்ட் ஆகியுள்ளது, அதுவும் சீரியல் வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி ஒரு காட்சி நடந்துள்ளதாக கூறப்படும் அளவுக்கு அப்படி என்ன நடந்திருக்கிறது? என பலரும் இந்த முத்தழகு சீரியலின் புரோமோவை, தேடிப் பார்த்துள்ளனர்.
இந்த சீரியலில் தற்போதைய கதைப்படி கதையின் நாயகன் நாயகியை திருமணம் செய்துகொண்டாலும், விருப்பமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்க, இவர்களுக்குள் ஒரு கெமிஸ்ட்ரி உண்டாக வேண்டும் என்று, இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமான பாட்டி கேரக்டர் ஒரு திட்டம் தீட்டுகிறது. அந்த திட்டத்தின் பின்விளைவு தான் இந்த சீரியல் ட்ரெண்ட் ஆகி வருவதற்கு காரணமாகியுள்ளது.
கோயிலில் காட்சிகள்
இந்த சீரியலில் நாயகி முத்தழகும், ஹீரோவும் கோயிலுக்கு செல்லும்போது, பாட்டி படிகட்டில் முள்ளை போட்டுவிட்டு, நாயகி அதில் மிதித்து, காலில் காயமுற நாயகன் அவரை தூக்கிச் செல்வார் என கணக்கு போடுகிறார். ஆனால், நடந்தது தான் பெரிய ட்விஸ்ட். வழக்கத்துக்கு மாறாக, நாயகன் காலில் முள் குத்திவிட, நாயகி முத்தழகு நாயகனை தூக்கிக் கொண்டு சென்னை எக்ஸ்பிரஸ் ஷாருக் கான் போல கோயிலை அடைய படியேறி நடக்கிறார்.
நெட்டிசன்கள் மத்தியில் வைரல்..
இப்படி இந்த சீரியலில் ஹீரோயின் ஹீரோவை தூக்கிக்கொண்டு மலைக் கோயிலுக்கு செல்லும் இதுபோன்ற ஒரு பெண்ணிய , முற்போக்கு காட்சியெல்லாம் திரைப்படத்திலேயே அரிதாக இருக்கும்போது, இந்த காட்சி சீரியலில் இடம் பெற்றிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆனது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு மேக்கிங் வீடியோவில், முத்தழகு ஹீரோயின் முதலில் ஹீரோவை தூக்கினாலும், அதன் பின்னர் உண்மையில் ஹீரோயின் ஹீரோவை தூக்கிக் கொண்டு மலையேறவில்லை என்பது தெளிவுபடுகிறது.
மேக்கிங் வீடியோ
மலைக்கோயில் படிக்கட்டுகளில் ஒருவரை தூக்கிக் கொண்டு ஏறுவது சிரமம் என்பதால், இத்தகைய முறையை படக்குழுவினர் கையாண்டுள்ளதாக தெரிகிறது.