''விஸ்வாசமும்' இதே பின்னணி தான?'' - 'தேவராட்டம்' இயக்குநர் கேள்வி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி ஆகியோர் நடிப்பில் கடந்த மே 1 ஆம் தேதி வெளியான படம் 'தேவராட்டம்'. இந்த படத்தை 'குட்டிபுலி', 'கொம்பன்', 'மருது' ஆகிய படங்களின் இயக்குநர் முத்தையா இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு நிவாஸ்.கே பிரசன்னா இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் மீது எழுந்த விமர்சனங்கள் குறித்து இயக்குநர் Behindwoods Airக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது தொகுப்பாளர், 'உங்கள் படங்கள் மக்கள் மத்தியில் சாதிய படங்களாக ஏன் பார்க்கப்படுகிறது . என்ன குழப்பம் நடக்குதுனு நினைக்குறீங்க?' என்று கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர்,  ''குட்டிபுலி', 'கொம்பன்', 'மருது', 'கொடிவீரன்', 'தேவராட்டம்' ஆகிய படங்களை எடுத்துக்கொண்டால் ஒரு பின்புலம் இருக்கும். பின்புலத்தை வைத்து தான் நான் படம் பன்றேன். அந்த பின்புலத்தை வைத்து நான் பிரச்சனை பண்ணதே இல்ல. உதாரணமா குட்டிபுலி எடுத்துக்கிட்டிங்கனா, ஒரு அம்மாவுக்கும், பையனுக்குமான உறவை மேன்மைபடுத்தி சொல்லிருப்பேன்.

அதுல கட்டப்பஞ்சயாத்து , ரௌடிசம் பின்புலமா இருக்கும்.  இப்போ 'தேவராட்டம்' அக்காவுக்கும் தம்பிக்குமான உறவு. என் ஒவ்வொரு படத்துக்கும் டைட்டிலால் பிரச்சனை வந்துட்டு இருக்கு. ஆனா படம் பார்த்த பிறகு இந்த பிரச்சனைகள் குறைந்துடும்.

ஒரு படத்தை படமா பாருங்க. 'விஸ்வாசம்'னு ஒரு படம் வந்துச்சு இதே பின்புலத்துல தான் சொல்லிருந்தாங்க. இத விட அதிகமா இருக்கும் நிறைய விஷயங்கள். இங்க ஒவ்வொருத்தனும் வெற்றிக்காக போராடிட்டு இருக்கிறார்கள். நான் கண்ணியமா படம் பண்ணிட்டு இருக்கேன். அத கண்ணியமா பாருங்க. அதுல ஏன் கம்யூனிட்டி பார்க்குறீங்க என்பது தான் என் கேள்வி'. என்றார்.

Muthaiah clarifies about Devarattam and speaks about Ajith's Viswasam

People looking for online information on Devarattam, Gautham Karthik, Muthaiah will find this news story useful.