சூப்பர் கேப்சன்... சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் இளையராஜா இருக்கும் பழைய படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: இசைஞானி இளையராஜா நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

இசைஞானி இளையாராஜா இசை என்றாலே, அது பல தலைமுறைகளை தாண்டியும் இன்றளவும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. கடந்த 1975-ம் ஆண்டு முதல் திரையுலகில் இசையமைக்க தொடங்கிய இளையராஜா, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை நெருங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என கிட்டத்தட்ட 9 மொழிகளில், 1400-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். அண்மையில் புற்று நோய் சிகிச்சையில் இருந்த பெண்மணி வலி தெரியாமல் இருக்க கற்பூர பொம்மை பாட்டை கேட்டார்.

காதலர் தினம் சர்ப்ரைஸ்

இவ்வாறு இசையால் ரசிகர்களின் வாழ்வோடு கலந்திருக்கிறார் இளையராஜா. இந்நிலையில், காதலர் தினமான, நேற்று இளையராஜாவின் 1422-வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி , ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் உருவாகி வரும் 'ஏ பியூட்டிஃபுல் பிரேக்கப்' என்ற படத்திற்கு இளையராஜா இசைமையக்கிறார். கன்னட இயக்குநர் அஜித் வாசன் உஜ்ஜினா இப்படத்தை இயக்குகிறார்.  5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரிக்கிறது.

இளையராஜா - ரஜினிகாந்த்

இந்நிலையில், இசைஞானி இளையராஜா தனது சமூகவலைதளபக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'என்றும் என்றென்றும்' என பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்புகைப்படத்தை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மற்ற இசை அமைப்பாளர்களை விட இளையராஜாவுடனே அதிக முறை பயணித்திருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த அறிமுக படமான பைரவி தான் இளையராஜா இசைமைப்பில் வெளியான முதல் ரஜினிகாந்தின் படமாகும். அவர் கதாநாயகனாக நடித்த முதல் படமே இளையராஜாவுடனே தொடங்கியது. இந்த பயணம் வீரா வரை தொடர்ந்தது.

ரஜினிகாந்தின் தனி பாசம்

இளையராஜா மீது நடிகர் ரஜினிகாந்திற்கு தனி மரியாதை இருக்கிறது. பொதுமேடை நிகழ்ச்சிகளில் கூட இளையராஜாவை சாமி என்றே அழைப்பார். அந்த அளவிற்கு இருவருக்குமான புரிதல் இருந்து வருகிறது. இளையராஜா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை கோடம்பாக்கத்தில் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கினார். 'இளையராஜா ஸ்டுடியோ' என்ற பெயரிடப்பட்ட அந்த ஸ்டுடியோவில் படங்களுக்கு இசையமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அப்போது, நடிகர் ரஜினி திடீர் விசிட் அடித்து இளையாராஜாவை நேரில் சந்தித்து பேசினார்.

இவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானது. இளையராஜாவின் புது ஸ்டூடியோ ரஜினியின் மனதுக்கு நெருக்கமான இடமாகி விட்டது என்று கூட செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Musician Ilayaraja shared a photo with actor Rajinikanth

People looking for online information on Isaignani Ilaiyaraja, Maestro ilaiyaraja, Photos, Super Star Rajinikanth, Twitter, Viral will find this news story useful.