எதற்காக அவரை மதம் மாற்றினீர்கள்..? கேள்வி எழுப்பிய ரசிகர்கள்... யுவனின் மனைவி நெத்தியடி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் 2014-ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி, தன் பெயரை 'அப்துல் காலிக்' என்று அறிவித்தார். இதனிடையே 2015-ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அழகான பெண் குழந்தை இருக்கிறது.

Advertising
Advertising

இந்நிலையில் இன்ஸ்ட்டாகிராம் லைவில் வந்த அவரது மனைவியிடம் பலரும், "ஏன் யுவனை முஸ்லீமாக மாற்றினீர்கள். நீங்கள் இந்துவாக மாறுவீர்களா?" போன்ற கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர் "அவர் இஸ்லாமை தேர்ந்தெடுத்ததில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம் மதத்தில் இருந்த பிறகுதான் எனக்கு அவரைத் தெரியும். எங்கள் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. அவருக்கு மற்ற மதங்களை விட இஸ்லாம் மதம் பிடித்திருந்தது. மிகப்பெரிய கேள்விகளுக்கான விடைகளை அவர் குர்ஆனில் பெற்றுக்கொண்டார். அதனால் தான் அவர் இஸ்லாம் மதத்தை தேர்ந்தெடுத்தார். எங்களுடைய ஒரே எண்ண அலைவரிசையால் நாங்கள் இணைந்திருக்கிறோம். பெரிய விஷயங்களைப் பற்றிய எங்களுடைய உரையாடல்கள் மூலம் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு இருக்கிறோம்" என்று அதிரடியாக பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

எதற்காக அவரை மதம் மாற்றினீர்கள் யுவனின் மனைவி நெத்தியடிMusic director yuvan wife gives an excellent response on his religion conversion

People looking for online information on Religion, Wife, Yuvan Shankar Raja will find this news story useful.