"அண்ணா, எல்லா எமோஷனல் சீன்ஸ் பார்த்தப்போ".. வாரிசு படம் பற்றி மனம் உருகிய தமன்... VIRAL TWEET!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக 'வாரிசு' திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11.01.2023 அன்று திரை அரங்குகளில் வெளியாக உள்ளது. வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | தன்னை நாமினேட் செய்த விக்ரமனிடம் நன்றி சொன்ன அசிம்.. நெகிழ்ச்சி பின்னணி!!.. Bigg Boss!!

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த டிசம்பர் 24 ஆம் தேதியன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றிருந்தது.

இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வாரிசு படத்தின் 5 பாடல்களும் வெளியாகி இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, சமீபத்தில் வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளதால், ரசிகர்களும் இந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், வாரிசு திரைப்படம் குறித்து படத்தின் இசை அமைப்பாளர் தமன் தற்போது பகிர்ந்துள்ள ட்வீட் இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.

வாரிசு படத்தின் ரிலீஸிற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், படத்தை இசை அமைப்பாளர் தமன் தற்போது பார்த்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து நடிகர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ட்வீட் செய்துள்ள தமன், "அண்ணா, எல்லா எமோஷனல் காட்சிகளையும் நான் பார்த்த போது இதயத்தில் இருந்து அழுதேன். கண்ணீர் அனைத்தும் விலை மதிப்பற்றது. வாரிசு திரைப்படம் எனது குடும்பம் அண்ணா. என் மனதுக்கும் நெருக்கமானது. இந்த மிகப் பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி அண்ணா. லவ் யூ" என மனம் உருகி போய் குறிப்பிட்டுள்ள தமன், #BlockbusterVarisu என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.

Also Read | "மிக்க நன்றி நண்பா, இதனால தான் நீங்க தளபதி".. தமிழில் தெறிக்கும் ஷாருக்கானின் ட்வீட்!!

தொடர்புடைய இணைப்புகள்

Music director thaman tweet about varisu movie pic with vijay

People looking for online information on S Thaman, Thaman Tweet, Varisu, Vijay will find this news story useful.