தீவிர அஜித் ரசிகர்... இப்போ தளபதி விஜய்க்கு இசையமைப்பாளர்! தமன் பகிர்ந்த சூப்பர் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : தீவிர அஜித் ரசிகரான இசையமைப்பாளர் தமன் நடிகர் விஜய்யின் 66 படத்துக்கு இசையமைக்க இருக்கிறார்.

Advertising
>
Advertising

மொட்டைத் தலையுடன் பிரபல நடிகை.. "ஏன் இப்டி?.." குழம்பிய ரசிகர்கள்.. நடிகை சொன்ன விளக்கம்

2003 ம் ஆண்டு வெளியான “பாய்ஸ்” படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராக அறிமுகமானவர் தமன் S.

பின்னர் தெலுங்கு பட உலகின் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார். தெலுங்கின் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து தற்போது தனக்கென தனித்த ரசிகர் பட்டாளத்தையும், பல படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன் படங்களுக்கு இசையமைத்து வரும் தமன் தமிழிலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் கூட "அஜித்துடன் வேலை பார்க்க ஆவலோடு இருப்பதாகவும், அஜித் தனக்கு மிகவும் பிடித்த நபர்" என்றும் சில நாட்களுக்கு முன் பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில் தளபதி விஜய் அடுத்து நடிக்கும் தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இது குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. முதல் முறையாக விஜய்யுடன் தமன் இணைகிறார்.

"நானும் விஜய் ரசிகன் தான்.." பீஸ்ட் டிரைலர் பற்றி ஷாருக்கான் ட்வீட்.. அட்லீ கொடுத்த ரியாக்ஷன்

தொடர்புடைய இணைப்புகள்

Music Director Thaman about Thalapathy Vijay 66 Movie

People looking for online information on Music Director Thaman, SS Thaman, Thalapathy 66, Thalapathy Vijay, Thalapathy Vijay 66 Movie, Vijay will find this news story useful.