"தல அஜித், என் FAVOURITE! தல கூட வேலை செய்யனும்!", தளபதி 66க்கு MUSIC? - மனம் திறந்த இசையமைப்பாளர் தமன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2003 ம் ஆண்டு வெளியான “பாய்ஸ்” படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராக அறிமுகமானவர் தமன் S.

Advertising
>
Advertising

பின்னர் தெலுங்கு பட உலகின் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார். தெலுங்கின் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து தற்போது தனக்கென தனித்த ரசிகர் பட்டாளத்தையும், பல படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன் படங்களுக்கு இசையமைத்து வரும் தமன் தமிழிலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் தமன். அதில் ஒரு தல அஜித் ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த தமன், " அஜித்துடன் வேலை பார்க்க ஆவலோடு இருப்பதாகவும், அஜித் தனக்கு மிகவும் பிடித்த நபர்" என்றும் பதில் அளித்துள்ளார்.

மேலும் ஒரு தளபதி விஜய் ரசிகர், "தளபதி 66க்கு இசை நீங்களா?" என கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள தமன், Finger Crossed என கூறியுள்ளார். 

இதன் மூலம் தமன் விஜய்யின் அடுத்த படத்திற்கு இசையமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கிறார்.

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Music Director Thaman About Thalapathy 66 & Thala Ajith Kumar

People looking for online information on Ajith Kumar, Thaman S, Vijay will find this news story useful.