''ஆரிதான் டைட்டில் வின்னர்..'' - அதற்கு இதெல்லாம் காரணம்.!! - பிரபலம் சொன்ன பளீச் விஷயம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் நடிகர் ஆரி குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார். 

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 80 நாட்களை நெருங்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் இப்போது சில போட்டியாளர்களே இருக்கு, புதுபுது டாஸ்க் கொடுப்பட்டு, கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ள ஆரி குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், ''ஆரிதான் டைட்டில் வின்னர். பல திசைகளில் இருந்து வரும் தாக்குதல்களை இவர் எப்படி அசால்ட்டாக சமாளிக்கிறார் என்று ஆச்சர்யமாக உள்ளது''. 

தனக்கு எதிரான எல்லா சவால்களையும் கடந்து அவர் இரும்பு மனிதராக இருக்கிறார். இது சுலபமாக தெரியலாம், ஆனால் என்னை பொறுத்த வரையில் இது பெரிய விஷயம்'' என பதிவிட்டுள்ளார். 

 

 

தொடர்புடைய இணைப்புகள்

ஆரி பற்றி ஜேம்ஸ் வசந்தன் கருத்து | Music director james vasanthan statement on aari in biggboss tamil

People looking for online information on Aari, BiggBoss Tamil 4, James vasanthan will find this news story useful.