நடிகை சமந்தாவுடன்.. 'HRIDAYAM' இசையமைப்பாளர் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ.. இணையத்தில் 'செம' வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இசையமைப்பாளரான ஹிஷம் அப்துல் வஹாப், நடிகை சமந்தாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ஜொலிக்கும் செட்.. குத்து பாட்டுக்கு ஆடிய விஷால் & S.J.சூர்யா… மார்க் ஆண்டனி BTS ஃபோட்டோ

தெலுங்கில் பிரபல நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா அடுத்ததாக 'குஷி' என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை சமந்தா நடித்து வருகிறார்.

விஜய் தேவரகொண்டா - சமந்தா

குஷி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு இருந்தது. அதே போல, இந்தாண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி, குஷி திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குஷி திரைப்படத்தை இயக்குனர் ஷிவா நிர்வானா இயக்கி வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் படத்தை வைத்து பார்க்கும் போது, ஒரு காதல் கதையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோருடன் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, ரோகிணி உள்ளிட்ட ஏராளமானோர் குஷி படத்தில் நடித்து வருகின்றனர். மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள முரளி, குஷி படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. 'ஹிருதயம்' படம் மூலம் தன் பக்கம் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் ஹிஷம் அப்துல் வஹாப், குஷி படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

வைரலாகும் புகைப்படம்

இதனிடையே, காஷ்மீரில் வைத்து நடைபெற்று வந்த குஷி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, தற்போது நிறைவு பெற்றுள்ளது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் BTS புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் ஹிஷம் அப்துல் வஹாப், தனது மனைவியுடன் சேர்ந்து, நடிகை சமந்தாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | WOW! சமந்தா - விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி'.. BTS புகைப்படங்களுடன் வெளியான LATEST அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Music director Hesham Abdul wahab with actress samantha

People looking for online information on Hesham Abdul Wahab, Music Director, Samantha will find this news story useful.