மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி பற்றி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவையும் வென்று, 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், செப்டம்பர் 25 பிற்பகல் ஒரு மணியளவில் காலமானார்.
இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் எஸ்.பி.பி பற்றி தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, ''தேவ் திரைப்படத்தின் ரெக்கார்டிங் நடக்கும் போது,, எஸ்.பி.பி அவர்கள், அவரின் ட்ரைவரை என்னுடன் சேர்த்து வைத்து, அவரது கைகளாலேயே ஒரு போட்டோவை எடுத்தார். பிறகு அதை ட்ரைவரிடம் கொடுத்து, இப்போ சந்தோஷமா என மகிழ்ச்சியுடன் கேட்டார். அவ்வளவு தன்னடக்கமான மனிதர் அவர்'' என புகழாரம் சூட்டியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் பகிர்ந்துள்ள இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.