விஜய் - வெற்றிமாறன் இணையும் திரைப்படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் செம தகவல் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். கடந்த ஆண்டு இவர் இசையமைத்த அசுரன் படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் தற்போது சூரரைப் போற்று, ஜெயில் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது விஜய் - வெற்றிமாறன் இணையும் திரைப்படம் பற்றி கேட்டதற்கு, ''கண்டிப்பாக, இது மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு ப்ராஜக்ட். இருவருமே ஒன்றாக இணைந்து பணியாற்ற விரும்புகின்றனர். அதற்கான நேரம்தான் இப்போது சரியாக அமையாமல் இருக்கிறது. அடுத்த வருடமோ, இல்லை அதற்கு பிறகு, அவர்களின் கமிட்மென்ட்க்கு ஏற்ப இந்த படம் ஆரம்பிக்கும். ஆனால், கண்டிப்பாக ஒரு சூப்பர் படமாக இது இருக்கும்'' என அவர் தெரிவித்தார்.
மேலும் சுதா கொங்கரா - அஜித் படம் பற்றி கேட்டதற்கு, ''அது செம ஸ்க்ரிப்ட். அது நடந்தால் செமயாக இருக்கும். சூரரைப் போற்று சுதா கொங்கராவை ஒரு லெவலுக்கு எடுத்து செல்லும், அதே போல இந்த படமும் இந்திய அளவில், அவரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். நல்ல ஆக்ஷன் படம் இது. இந்த கதையை சுதா என்னிடம் சொன்னார். இந்த படம் எடுக்கப்பட்டால், வேற லெவலில் இருக்கும்'' என அவர் தெரிவித்தார்.
மேலும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் பேசிய வீடியோ தொகுப்பு.