ஏ.ஆர்.ரகுமானின் தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் புகழ்ப்பெற்ற இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவரின் தாயார் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். இதை தொடர்ந்து அவரது வீட்டிற்கு பாடகர் மனோ, இயக்குநர் ஷங்கர் ஆகியோர் வந்தனர்.
இந்நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். மறைந்த கரீமா பேகம் அவர்களுடன் குடும்பத்துடன் எடுத்த போட்டோவை அவர் பகிர்ந்துள்ளார்.
மேலும், ''எப்போதுமே அவர் எங்களின் குயின்..'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷின் பதிவை கண்ட ரசிகர்கள், ரகுமானின் தாயாருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags : AR Rahman, GV Prakash Kumar, AR Rahman Mother