தல அஜித்தின் 'காதல் மன்னன்' படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். தொடர்ந்து இயக்குநர் சரண் கூட்டணியில் இவர் இசையமைத்த 'அமர்களம்', 'அட்டகாசம்', 'ஜெமினி', 'ஜேஜே', 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்', 'அசல்' பட பாடல்கள் மிகவும் வரவேற்பை பெற்றவை.
மேலும் சேரனின் 'பாண்டவர் பூமி', 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. இந்நிலையில் இசையமைப்பாளர் பரத்வாஜ் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது 'அட்டகாசம்' படம் குறித்து பேசிய அவர், 'தீனா' படத்தின் மூலம் அவருக்கு தல என்ற பெயர் கிடைத்தது. அதனால் இனி அவர் தல தான் என்று அதற்காக ஒரு பாடல் செய்யலாம் என்று முடிவு செய்தோம். இவருக்கு ஈடாகுமா என்பது போல தல போல வருமா என்று வைத்தோம். நானே அந்த பாடலை பாடினேன்.
அந்த படத்துல உனக்கென்ன என்ற பாடல் இருக்கும். அது விஜய்யை அட்டாக் பண்ற மாதிரியே இருக்கும். அந்த பாடலில் நான் காட்டுச்செடி என்பது போல வைரமுத்து சார் எழுதியிருந்தார். சினிமா ஒரு புரொஃபசனல் போட்டி தானே . அதுல பெர்சனல்னு எதுவும் இல்ல. அது சரணின் எண்ணம் தான்'' என்றார்.