பிரபல தமிழ், தெலுங்கு, இந்தி இசையமைப்பாளர் திடீர் மரணம்.. இந்திய திரையுலகுக்கு பெரும் இழப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: பிரபல இசையமைப்பாளர் பப்பி லஹிரி இன்று (16.02.2022) காலமானார். இவருக்கு வயது 69

Advertising
>
Advertising

ஷங்கர் - ராம்சரண் இணையும் #RC15 படக்குழு வெளியிட்ட பரபரப்பான அறிக்கை! முழு தகவல்

அலோகேஷ் லஹிரி எனும் இயற்பெயர் கொண்ட பப்பி லஹிரி இந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்ந்தவர். இந்திய சினிமாவில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர்.

அமர் சங்கீ, ஆஷா ஓ பலோபாஷா, அமர் துமி, அமர் பிரேம், மந்திரா, பத்னம், ரக்தேலேகா, பிரியா போன்ற பெங்காலி படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். இந்த படங்கள் மூலம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி அவருக்கு சாத்தியமானது.

1980கள் மற்றும் 1990களில் வார்தத், டிஸ்கோ டான்சர், நமக் ஹலால், ஷராபி, டான்ஸ் டான்ஸ், கமாண்டோ, சாஹேப், கேங் லீடர், சைலாப் போன்ற திரைப்படங்களினாலும் பிரபலமானார்.

தமிழில் அபூர்வா சஹோதரிகள் (1983), பாடும் வானம்பாடி (1985), கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா (1987) ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். குஜராத்தி, கன்னடம், தெலுங்கு, பெங்காலி, இந்தி என இந்தியாவின் முக்கிய மொழிகளில் 100க்கும் மேற்ப்பட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  கடைசியாக 2020 ஆம் ஆண்டு வெளியான 'பாகி 3' படத்துக்காக பாங்காஸ் என்ற பாலிவுட் பாடலைப் பாடினார்.

லஹிரி 2014 இல் BJP யில் சேர்ந்தார். அவர் 2014 இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் (லோக்சபா தொகுதி) யில் இருந்து BJP வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

லஹிரி ஒரு மாதமாக மும்பையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் COVID காரணமாக அனுமதிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவரது குடும்பத்தினர் மூலம் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

நள்ளிரவுக்கு சற்று முன் OSA (Obstructive Sleep Apnea) (தூக்கத்தில் மூச்சுத்திணறல்) காரணமாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் தீபக் நம்ஜோஷி கூறியுள்ளார். 

இவரது இறப்புக்கு அரசியல் கட்சி தலைவர்களும், கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங், அசோக் பண்டிட் (இயக்குனர்), கலெக்டர் அவானிஷ் சரண், ஹன்சல் மேத்தா ஆகியோர். 

வலிமை ரிலீஸ் ஆகும் அதே நாளில்.. போனி கபூர் கொடுக்கப்போகும் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Music director bappi lahiri passed away at age of 69

People looking for online information on Bappi Lahiri, Bollywood, Hindi Songs, Kollywood, Music Composer, RIP, Songs, Tamil Music Director will find this news story useful.