"இது அன்பால் இணைந்த இதயம்.." A.R. ரஹ்மான் - இளையராஜா சந்திப்பு! ARR வெளியிட்ட சூப்பர் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர்கள் A.R. ரஹ்மான் & இளையராஜா சந்திப்பு நடந்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "விஜய் சார் சொன்ன அந்த ஒரு விஷயம் என்ன Touch பண்ணிடுச்சு".. நெகிழ்ந்து போன Yuvan.. சுவாரஸ்ய பின்னணி

இந்திய சினிமாவில் மிக முக்கியமான இசையமைப்பாளர்கள் இளையராஜாவும் ரஹ்மானும். 80-களில் இருந்து தமிழ், இந்தி சினிமா படங்களின் வெற்றிக்கு இவர்களின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.

'Dubai Expo 2020' யில் இசை நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் நடத்தி இருந்தார் ரஹ்மான். அந்த சமயத்தில்,  ரஹ்மான் ஸ்டூடியோவிற்கு விசிட் அடித்திருந்தார் இளையராஜா. ரஹ்மான் மற்றும் இளையராஜா இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி, அதிக லைக்குகளை அள்ளி இருந்தது.

இந்நிலையில், ரஹ்மான் - இளையராஜா சந்திப்பு சென்னையில் நடந்துள்ளது. ஹங்கேரி புடாபெஸ்ட்டில் இருந்து இளையராஜாவும், அமெரிக்காவில் இருந்து ரஹ்மானும் தமிழகம் திரும்பிய போது விமான நிலையத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு, "இருவரும் வெவ்வேறு கண்டத்தில் இருந்து திரும்பினாலும் எங்களின் வீடு எப்போதும் தமிழகம் தான்" என ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வைரலாகி வருகிறது.

தற்போது  மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு,  அயலான், மாமன்னன் ஆகிய முக்கிய படங்களில் ரஹ்மான் பணியாற்றுகிறார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் இசை  வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்று நடக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | "படத்துக்கு Music பண்ணி முடிச்சதும் அஜித் சார் Reaction இது தான்".. சூப்பர் விஷயம் பகிர்ந்த யுவன்!!

தொடர்புடைய இணைப்புகள்

Music Composer Ilaiyaraaja and A R Rahman Meet at Chennai

People looking for online information on AR Rahman, Ilaiyaraaja, Ponniyin Selvan part 1, Venthu Thaninthathu Kaadu will find this news story useful.