VIDEO: சாந்தனு படத்துக்காக சிவாங்கி - சாம் விஷால் பாடிய 'தெறிக்கவிடும்' பாடல் ரிலீஸ்!..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் முருங்கைக்காய் சிப்ஸ்.

நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் தமிழ் படங்களில் முருங்கைக்காய் என்பதை ஒரு குறியீடாகவே கையாள்வார். மிகவும் ஜாலியான ஒரு கருத்தாக முருங்கைக்காய் பற்றி தமிழ் படங்களில் பாமர மக்களுக்கு பொழுதுபோக்குடன் கூடிய தாம்பத்திய புரிதல் கருத்துக்களை கூறுவதற்காக பாக்கியராஜ் இந்த முறையைக் கையாண்டார்.

இந்த நிலையில் பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு பாக்யராஜ் தற்போது லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர் தயாரிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன.

கலர்ஃபுல்லாகவும் ஜாலியாகவும் உருவாகியுள்ள கமர்ஷியல் எண்டர்டெயினிங் திரைப்படமான இந்த திரைப்படத்தின் அடுத்த பாடலான “Talku Lessu Worku Moreu” என்கிற பாடல் தற்போது வெளியாக இருக்கிறது.

கு.கார்த்தி எழுதியுள்ள இந்தப் பாடலை பிரபல விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பாடகரும் குக் வித் கோமாளி மூலம் புகழ்பெற்றவருமான சிவாங்கி பாடியிருக்கிறார். இவருடன் சாம் விஷால் என்பவர் இந்த பாடலை இணைந்து பாடியுள்ளார்.

இந்த பாடலின் லிரிகல் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஸ்ரீஜர் இயக்கியுள்ள இப்படத்துக்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

ALSO READ: கார்த்திக் நரேனின் "நரகாசூரன்" பிரபல ஓடிடியில் வெளியாகிறதா? .. பின்னணி தகவல் என்ன?

தொடர்புடைய இணைப்புகள்

Murungakkai Chips Talku Lessu Worku Moreu Sivaangi lyrical song

People looking for online information on Athulya Ravi, Ku Karthi, Libra Production, Libra Productions, Murungakkai Chips Tamil, Ravindar Chandrasekaran, Shanthanu Baghyaraj, Shanthnu Bhagyaraj, Sivaangi will find this news story useful.