கபூர் & சன்ஸ் படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் ஷகுன் பத்ரா, தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதிஅனன்யா பாண்டே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'கெஹ்ரையன்' படத்தை இயக்கியுள்ளார். கெஹ்ரையன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இதில் 38 வயது மதிக்கத்தக்க தீபிகா படுகோன் 28 வயது நடிகருடன் சிக்கலான நவீன உறவுகள் பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது.
சிக்கலான நவீன உறவுகள் பற்றி பேசும், முக்கோண காதல் கதையாகவும் இருப்பதால் ரசிகர்கள் நிச்சயம் இப்படத்தை ஆதரிப்பார்கள் என்று தீபிகா படுகோன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், படத்தின் ட்ரைலரில் இடம்பெறும் குப்பைத் தொட்டி காட்சியை மும்பை மாநகராட்சி விழிப்புணர்வு செய்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்கார் விருது தகுதி பட்டியலில் ஜெய்பீம்.. 2 இந்திய படங்களில் ஒன்று.. ஜெயிச்சிடு மாறா!
சுமார் 2.42 நிமிடங்கள் கொண்டுள்ள இந்த படத்தின் டிரைலரில் தீபிகா படுகோனே குப்பையை குப்பைத்தொட்டியில் போடுமாறு சொல்வார். ஆனால் அதை நாயகன் மும்பையில் பாதி பேர் இப்படித்தான் என சொல்லி செய்ய மறுக்க தீபிகாவே அதனை குப்பைத்தொட்டியில் சேர்ப்பார். அந்த காட்சியை கட் செய்து அப்படியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது மும்பை மாநகராட்சி. குப்பைகளை சரியான இடத்தில் சேர்க்குமாறு சொல்லி அது தொடர்பான வாசகத்தையும் பதிவு செய்துள்ளது.
மும்பை நகரங்களில் ஆங்காங்கு நெகிழிகளையும் காணலாம். சமூகத்தின் மீது பற்று கொண்டுள்ள நடிகர்கள், நடிகைகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மும்பை மாநகருக்குள் 16 மில்லியன் டன்களுக்கும் அதிகமான கழிவுகளால் குப்பை மலைகள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சமூக பொறுப்பு ஒவ்வொருவருக்கும் தேவை.
முத்தக்காட்சிகளால் பரபரப்பை கிளப்பிய தீபிகா படுகோனே! புதிய படத்தின் ரொமாண்டிக் டிரெய்லர்!
அந்தவகையில், நடிகை தீபிகா படுகோன் குப்பை கொட்டும் காட்சியை விழிப்புணர்வு செய்வதால் மக்களிடம் எளிதில் இதுகுறித்த கருத்து சேர்ந்துவிடுகிறது.
மக்களும் அதனை கடைப்பிடிக்க தொடங்குவாரகள். வீட்டை சுத்தம் செய்வது போல் தெருவையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே மும்பை மாநகராட்சியின் ஆசையாக உள்ளது. தற்போது இதுதொடர்பான வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.