டிவி சீரியலில் CASTING COUCH...? - 'மின்னலே' புகழ் தர்ஷா அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது சில வணிக செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் மெல்ல மெல்ல தளர்வுகளை அளித்து வருகிறது. இதனயைடுத்து தற்போது டிவி சீரியல்களுக்கு அதிகபட்சம் 60 பேர் கொண்டு படப்பிடிப்பு நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

Advertising
Advertising

இதன் ஒரு பகுதியாக ஜி தமிழில் 'முள்ளும் மலரும்' சன் டிவியில் 'மின்னலே' சீரியல்களின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருபவர் தர்ஷா. தற்போது விஜய் டிவியில் செந்தூரப்பூவே சீரியலில் நடித்து வருகிறார். இவரது சமீபத்திய ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு என்றே பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை தர்ஷா தனது சீரியல் அனுபவங்கள் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவரிடம் டிவி சீரியலில் Casting Couch குறித்து கேட்ட போது, ''ஒவ்வொரு சேனிலிலும் ஒவ்வொரு ஹெட் இருப்பாங்க. அவங்க தான் சீரியலில் நடிக்க போகும் நடிகர்களை முடிவு செய்வார்கள். அதன் பிறகே இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் நடிகர்கள் யார் என்ற விபரம் தெரிய வரும். அதனால் இந்த மாதிரி பிரச்சனைகள் டிவி சீரியலில் இல்லை.

நம்மள யாரும் கட்டாயப்படுத்துவதோ, இல்லை நீ செய்து தான் ஆகவேண்டும் என்று சொல்வதோ எதுவும் நடக்காது. நம்ம எப்படி இருக்கமோ, அந்த மாதிரி தான் அவங்களும் இருப்பாங்க. கண்ணாடி மாதிரி தான்'' என்று தெரிவித்தார்.

டிவி சீரியலில் CASTING COUCH...? - 'மின்னலே' புகழ் தர்ஷா அதிரடி வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Mullu Malarum fame Dharsha speaks casting couch on TV serial | டிவி சீரியலில் கேஸ்டிங் கவுச் குறித்து மனம் திறக்கும் தர்ஷா

People looking for online information on Dharsha Gupta, Sun TV, Zee Tamil will find this news story useful.