போடு வெடிய! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ROCKY படம்! ரிலீஸ் தேதியை மாஸாக அறிவித்த விக்னேஷ் சிவன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்தின் ரிலீஸ் தேதியை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

Most Expected Rocky Tamil Movie Release date announced
Advertising
>
Advertising

அருண் மாதேஸ்வரன் தற்போது, செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் வைத்து ‘சாணிக் காயிதம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படமும் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் 2011-ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கல்ட் அந்தஸ்து பெற்றுள்ள நியோ நொய்ர் வகைமையில் உருவான 'ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குனாரக இருந்தவர்.

Most Expected Rocky Tamil Movie Release date announced

இவர் சுதா கொங்கரா இயக்கிய  ‘இறுதிச்சுற்று’ படத்தில் வசன எழுத்தாளராகவும் பணியாற்றியவர். இந்த ராக்கி படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.  

இந்நிலையில் இந்த படம் வரும் டிசம்பர்-23 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அனைத்து உரிமையையும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் வ்ளியீட்டுக்கு சினிமா ரசிகர்கள் காத்திருந்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Most Expected Rocky Tamil Movie Release date announced

People looking for online information on Bharathi Raja, Rocky, Vasanth Ravi, Vignesh Sivan will find this news story useful.