தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்துக்கு பிறகு எச்.வினோத் இயக்கிய திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த இத்திரைப்படம் ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். இந்த திரைப்படத்தை தொடர்ந்து வினோத் - அஜித் இணைந்து உருவாகும் திரைப்படம் வலிமை.
போனி கபூரின் தயாரிப்பில் உருவாகும் வலிமை படத்துக்கான அப்டேட்டை தெரிந்து கொள்வதற்காக ஒரு வருட காலத்துக்கும் மேலாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தான், யுவன் ஷங்கர் ராஜா இசையில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகும் வலிமை படத்துக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கையில், இப்போது யுவன் ஷங்கர் ஒரு கிளப்ஹவுஸ் ஆப்பில் பேசிய பேச்சில் வலிமை படத்தின் முதல் INTRO பாடல் எப்போதும் போல் பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கும் என்பதைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் படத்தில் ஒரு அம்மா செண்டிமெண்ட் பாடல் இருப்பதாகவும், படத்தின் முதல் பாடலுக்கு 'கும்தா' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ALSO READ: மாநாடு-ல அந்த Scene-க்கு அப்றமும் அழுதுட்டே இருந்தேன்! .. மன்மதனை நினைவுபடுத்திய STR!