நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாமினேஷன் வெற்றிகரமாக துவங்கியது. தாங்கள் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் தகுதி அற்றவர்களாக தேர்வு செய்யப்பட்ட 8 பேரில் சுரேஷ் சக்கரவர்த்தி தவிர இதர போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் யார் வெளியே செல்வார்கள் என்பது பற்றி சமூக வலைதளங்களில் விவாதங்கள் களைகட்டி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் மார்னிங் வேக்கப் சாங்கை பிக்பாஸ் ஒளிபரப்பவில்லை என நெட்டிசன்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இளம் போட்டியாளர்கள் இந்தமுறை அதிகம் களமிறங்கி இருப்பதும், பெரும்பாலான போட்டியாளர்களுக்கு ஆர்மி இருப்பதும் இந்த கவலைக்கு காரணமாகி இருக்கிறது.
குறிப்பாக கேப்ரியலா, ஷிவானி, ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி, சம்யுக்தா ஆகியோரின் நடனத்துக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பது குறிபிடத்தக்கது. ஒருவேளை நேற்று டான்ஸ், பேஷன் ஷோ ஆகியவை நடைபெற்றதால் வேக்கப் சாங் தவிர்க்கப்பட்டதா? இல்லை எதுக்கு டைம் வேஸ்ட் என நினைத்து விட்டார்களா? என்பது தெரியவில்லை.