மோகன்லால் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த லூசிஃபர்.. ரீமேக் செய்கிறார் மோகன்ராஜா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன் லால் நடித்த லூசிஃபர் திரைப்படத்தை ரிமேக் செய்யவுள்ளார் இயக்குநர் மோகன் ராஜா. 

மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லுசிஃபர். நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். 

இந்நிலையில் தற்போது லுசிஃபர் திரைப்படத்தை தெலுங்கில் ரிமேக் செய்வது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆந்திரா சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். 

இயக்குநர் மோகன் ராஜா இப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. NVR Cinema மற்றும் Konidela நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படம் முழு ரிமேக்காக இருக்காது எனவும், ஒரு தழுவலாக இப்படம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

சிரஞ்சீவி படத்தை இயக்கும் மோகன் ராஜா | mohanraja to direct mohan lal's super hit lucifer

People looking for online information on Lucifer, Mohan Raja, Mohanlal will find this news story useful.