எதிர்பார்ப்பை எகிறவைக்கும் COMBO.. பிரபல இளம் இயக்குனருடன் கைகோர்க்கும் மோகன்லால்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்லால் நடிக்க உள்ள புதிய படத்தை பிரபல இளம் இயக்குனர் இயக்க உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | உதயநிதி ஸ்டாலினை சந்தித்த நடிகர் கார்த்தி.. வெளியான சந்திப்பின் பின்னணி தகவல்!

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் இயக்கத்தில் முன்பு வெளியான ஆமென், அங்கமாலி டைரிஸ், இ.ம.யூ, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்கள் உலக அளவில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது.

லிஜோ ஜோஸ் தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார். நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.

இந்த படத்திற்கு திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுத, கர்ணன் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே மம்முட்டியின் பேரன்பு, புழு படத்தின் கேமரா வேலைகளை தேனி ஈஸ்வர் கையாண்டவர். மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி தனது அடுத்த படத்தை மோகன்லால் நடிப்பில் இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. நடிகர் மோகன்லால் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், "எனது அடுத்த படம், இந்திய சினிமாவின் மிகவும் அற்புதமான மற்றும் அபார திறமையுள்ள இயக்குனர்களில் ஒருவரான லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியுடன் இருக்கும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தை ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ், மேக்ஸ் லேப்ஸ் மற்றும் செஞ்சுரி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ”என்று ட்வீட் செய்த மோகன்லால், லிஜோ மற்றும் படக்குழுவினருடனான சந்திப்பின்  புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Also Read | நடிகர் அஜித்துடன் 'துணிவு' படத்தின் முதன்மை டெக்னீசியன்.. வைரலாகும் தெறி புகைப்படங்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Mohanlal Teams up with Lijo Jose Pellissery for new movie

People looking for online information on Lijo Jose Pellissery, Mohanlal will find this news story useful.