த்ரிஷ்யம் 2' படத்திற்குப் பிறகு, மலையாள சினிமாவில் மோகன்லால் நடிக்கும் படம் 'ஆராத்து'
இந்த படத்தை பி. உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார், உதயகிருஷ்ணா எழுதியுள்ளார். 'ஆராத்து' படத்தில் மோகன்லால் "நெய்யாற்றின்கர" கோபன் வேடத்தில் நடிக்கிறார். சரியான மாஸ் மசாலா - நகைச்சுவையை மையமாகக் கொண்ட சிறந்த ஆக்ஷன் படமாக உருவாகிறது.
கோபன் ஒரு நோக்கத்துக்காக நெய்யாற்றின்கரையிலிருந்து பாலக்காட்டில் உள்ள ஒரு கிராமத்திற்கு வருகிறார்; அவர் பாலகாட்டுக்கு வந்த பின் அடுத்தடுத்த நடைபெறும் நிகழ்வுகளே இந்த படம். இந்த படத்தின் படப்பிடிப்பு பாலக்காடு தவிர, கேரளத்தின் சில பகுதிகள், ஹைதராபாத்திலும் படமாக்கப்பட்டன.
இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர். மற்ற நடிகர்களாக சமீபத்தில் இறந்த நடிகர் நெடுமுடி வேணு, சாய்குமார், சித்திக், விஜயராகவன், ஜானி ஆண்டனி, இந்திரன்ஸ், ராகவன், நந்து, பிஜு பாப்பன், ஷீலா, ஸ்வாசிகா, மாளவிகா மற்றும் ரச்சனா நாராயணன்குட்டி நடிக்கின்றனர்.
இந்த படத்தின் ஒளிப்பதிவு: விஜய் உலகநாத், எடிட்டராக: சமீர் முகமது. இசைக்கு: ராகுல் ராஜ். கலை இயக்குனராக: ஜோசப் நெல்லிக்கல். ஆடை வடிவமைப்பு: ஸ்டெஃபி சேவியர் ஆகியோர் பணிபுரிகின்றனர். இந்த படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர படக்குழு வேலை செய்தது. ஆனால் கேரளத்தில் அதிகரித்துவரும் கொரோணா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் படத்தின் வெளியீடு தாமதமானது. ஒரு வழியாக இந்த படத்தை வரும் 2022 பிப்ரவரி 10 அன்று வெளியிட உள்ளதாக படத்தின் இயக்குனர் உன்னி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.