மோகன்லால் நடிப்பில் 100 கோடி பட்ஜெட்டில் உருவான முதல் மலையாள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தேசிய விருது வென்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால்  மரக்கார் படத்தில் நடித்துள்ளார்.  இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Advertising
>
Advertising

ஆங்கிலேயர்களை எதிர்த்து முதலில் அரபிக்கடலில் கடற்படையை உருவாக்கிய மரக்காரின் உண்மைக்கதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் மலையாள சினிமாவில் அதிகபட்சமாக 100 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ளது. 67 வது தேசிய விருது விழாவில் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக ’மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்’ ஜூரிகளால் தோ்வு செய்யப்பட்டது.

சிறந்த படம், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஆடை வடிவமைப்பு என மூன்று தேசிய விருதுகளை வென்றது. இந்தப் படத்தில் மோகன்லாலின் மகன் பிரனவ் மோகன்லால், அர்ஜூன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பரியதர்ஷன், ஃபாசில், சித்திக், மறைந்த நடிகர் நெடுமுடி வேணு, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். 

ஒடிடியில் வெளியாகும் என கருதப்பட்டு, கேரள அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டுகோள் வைத்தார். இந்நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த படம் 02.12.2021 அன்று உலகம் முழுவதும் திரயரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை பிரத்யேக போஸ்டர் மூலம் மோகன்லால் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Mohanlal 'Marakkar - Arabikadalinte Simham' movie release date

People looking for online information on Marakkar - Arabikadalinte Simham, Mohan Lal will find this news story useful.