இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் காம்போ, ரசிகர்களால் மறக்க முடியாத மிரட்டலான காம்போ என்று சொல்லலாம்.

காரணம் இவர்கள் இருவரும் தங்கள் த்ரில்லர் படங்கள் மூலம் தங்களுக்கென்று ஒரு முக்கிய இடத்தை செதுக்கிக் கொண்டவர்கள். இந்நிலையில் இந்த பிளாக்பஸ்டர் ஹீரோ - டைரக்டர் காம்போ மீண்டும் வந்துவிட்டது; ஆம், இவர்கள் இணையும் அடுத்த திரைப்படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு தற்போது வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்த கூட்டணியின் உருவாக்கத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ மற்றும் அதன் தொடர்ச்சியான பகுதியான, அண்மையில் வெளிவந்த ‘த்ரிஷ்யம்-2’ படங்களின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து, இயக்குநர் ஜீத்து ஜோசப் - மோகன் லால் இணையும் புதிய படத்துக்கு, ‘12TH MAN (நிழல்கள் விலக்கப்படுகிறது)’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஃபர்ஸ்ட் லுக்கில், ஒரு கல் வீட்டின் பின்னணியில் மோகன்லாலின் நிழல் இடம்பெற்றுள்ளது. த்ரிஷ்யம் படத்தை தயாரித்த ஆஷிர்வாத் சினிமாஸின் கீழ், ஆண்டனி பெரும்பவூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.