வந்துட்டாங்கப்பா…. திருஷ்யம் வெற்றிக் கூட்டணியின் அடுத்த படம்… ரிலீஸ் பற்றி வெளியான தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Mohanlal jeethu joseph 12 th man direct release in Disney
Advertising
>
Advertising

கவனம் ஈர்த்த கூட்டணி…

திருஷ்யம் மற்றும் திருஷ்யம் 2 ஆகிய படங்களின் வெற்றிப்படங்களைக் கொடுத்த மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் காம்போ, ரசிகர்களால் மறக்க முடியாத மிரட்டலான காம்போ என்று சொல்லலாம். காரணம் இவர்கள் இருவரும் தங்கள் த்ரில்லர் படங்கள் மூலம் தங்களுக்கென்று ஒரு முக்கிய இடத்தை செதுக்கிக் கொண்டவர்கள். இந்நிலையில் இந்த பிளாக்பஸ்டர் ஹீரோ - டைரக்டர் காம்போ மீண்டும் வந்துவிட்டது; ஆம், இவர்கள் இணையும் அடுத்த திரைப்படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

Mohanlal jeethu joseph 12 th man direct release in Disney

மெஹா ஹிட் Sequel…

இந்த கூட்டணியின் உருவாக்கத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ மற்றும் அதன் தொடர்ச்சியான பகுதியான, கடந்த ஆண்டு வெளியான ‘த்ரிஷ்யம்-2’ படங்களின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து, இயக்குநர் ஜீத்து ஜோசப் - மோகன் லால் இணையும் புதிய படத்துக்கு, ‘12TH MAN (நிழல்கள் விலக்கப்படுகிறது)’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெளியான பர்ஸ்ட் லுக்கில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கில், ஒரு கல் வீட்டின் பின்னணியில் மோகன்லாலின் நிழல் இடம்பெற்றுள்ளது. த்ரிஷ்யம் படத்தை தயாரித்த ஆஷிர்வாத் சினிமாஸின் கீழ், ஆண்டனி பெரும்பவூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

 

12th MAN ரிலீஸ் அப்டேட்…

தொடர்ந்து வெற்றிப் படங்களை மோகன்லாலும் ஜீத்து ஜோசப்பும் கொடுத்து வரும் நிலையில் இப்போது அவர்கள் மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்நிலையில் இந்த படத்தை நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட உள்ளனர் படக்குழுவினர். இது சம்மந்தமான போஸ்டரை வெளியிட்டுள்ள டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விரைவில் ரிலீஸ் என அறிவித்துள்ளது. திருஷ்ய்ம் 2 திரைப்படமும் இதுபோல ஓடிடியில்தான் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் முந்தையப் படங்களைப் போலவே இந்த படமும் ஒரு திரில்லர் படமாகவே இருக்கும் என நம்பப்படுகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

வந்துட்டாங்கப்பா…. திருஷ்யம் வெற்றிக் கூட்டணியின் அடுத்த படம்… ரிலீஸ் பற்றி வெளியான தகவல் வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mohanlal jeethu joseph 12 th man direct release in Disney

People looking for online information on 12th Man, Drishyam, Jeethu Joseph will find this news story useful.