என்னது மோகன்லால் த்ரிஷா நடிப்பில் உருவாகும் ராம் படம் ட்ராப்பா? இயக்குனர் என்ன சொல்கிறார்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லாலேட்டன் என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்படும் மோகன்லால் இன்று தனது  60-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.  கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘லூசிபர்’ படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டும் ‘பிக் பிரதர்’ படத்திலும் வெற்றி மாலை சூடினார்.  ‘சச்சிதானந்தன்’ என்ற அவரது கதாபாத்திரத்தையும், லாலின் இயல்பான நடிப்பையும் ரசிகர்கள் பெரிதும் விரும்பினார்கள். உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கவும் இப்படம் தவறவில்லை. 

இந்நிலையில்  2013 ஆம் ஆண்டு மோகன்லால் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான த்ரில்லர் திரைப்படமான த்ரிஷ்யம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படம் மோகன்லால் திரையுலக சாதனை வரலாற்றில் முக்கியமான இடத்தை பிடித்தது எனலாம்.

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பின், மோகன்லாலை வைத்து ராம் என்ற படத்தை ஜீத்து ஜோசப் தொடங்கினார். இந்தப் படத்தில் த்ரிஷா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.   இந்தப் படத்தின் பூஜை கடந்த ஆண்டு நடைபெற்றது. கேரளா போர்ஷன்கள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது. அச்சமயத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக லாக்டவுன் ஏற்பட்டதால் ராம் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ராம் படத்தை இயக்குனர் கைவிட்டதாக இணையத்தில் ஒரு செய்தி சமீபத்தில் பரவியது. இந்த வதந்திக்கு முடிவு கட்டும் வகையில் ஜீத்து ஜோசப் தனது ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதினார், அதில் ‘மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ‘ராம்’ படத்தை கைவிட்டு நான் அடுத்த படத்தை திட்டமிடுகிறேன் என்ற செய்திகள் கடந்த சில நாட்களாக இணையத்தில் உலவி வருகிறது.  கரோனா பிரச்சனை காரணமாக ராம் படத்தின் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  கேரளாவில் கொரோனா பிரச்சனைகள் குறைந்த நிலையில் ஷூட்டிங் தொடங்கலாம் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து வெறொரு படத்துக்கான தொடக்கத்தில் உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

மோகன்லாலில் பிறந்த நாளான இன்று இச்செய்தி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. லாலேட்டனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Tags : Mohanlal

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mohanlal and Jeethu Joseph movie Ram shooting after lockdown

People looking for online information on Mohanlal will find this news story useful.