லவ்டுடே பட பாடலை கண்முன்னே கொண்டுவந்த மாற்றுத் திறனாளி இளைஞரின் இசை.. வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்மையில் வெளியான 'லவ்டுடே, படத்தில் வரும் 'என்னைவிட்டு' பாடலுக்கு மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் இசையமைக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | சிகிச்சைக்காக காத்திருக்கும் 100 குழந்தைகள்..உதவ முன்வந்த துல்கர் சல்மானின் குடும்பத்தினர்.!

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி'. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து பிரதீப், லவ் டுடே படத்தை இயக்கி உள்ளார்.  இதில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. 'லவ் டுடே' படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை வடிவமைப்பை எம்கேடி கையாண்டுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த என்னை விட்டு பாடல் ரசிகர்களை ஈர்த்தது என்றே சொல்லவேண்டும். இந்நிலையில், மோகன பிரியன் எனும் இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் இந்த பாடலுக்கு அப்படியே இசையமைத்திருக்கிறார். மாற்றுத் திறனாளியான இவர், தனது இசையின் மூலமாக பாடலை நம் கண்முன்னே கொண்டுவருகிறார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, இந்த வீடியோ வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் மோகன பிரியனின் அபார திறமையை பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக, விக்ரம் திரைப்படத்தில் ரோலெக்ஸ் BGM-ஐ அவர் இசைத்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதுமட்டும் அல்லாமல் பல பாடல்களில் இவர் தனது திறமையை காட்டியுள்ளார். இசைமீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தையும், அவருடைய முயற்சியையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

 

Also Read | நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மரணம்.. நடிகை மீனாவின் உருக்கமான பதிவு.!

தொடர்புடைய இணைப்புகள்

Mohanapriyan Recreate Love today Ennai vittu song video

People looking for online information on Love today, Love today Ennai vittu song, Mohanapriyan, Pradeep Ranganathan will find this news story useful.